Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 1

Advertisement

உங்களுடைய "காதலால்
நெய்திடு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிரிஜாஷண்முகம் டியர்
நன்றி நன்றி பானு டியர்.:love:
 
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்

ஆரம்பமே செம அமர்க்களமாக ஆரம்பித்து இருக்கீங்களே
காலேஜ் முதல் வருடம் படிக்கும் பதினெட்டு வயது கூட நிரம்பாத சுவாதி செய்தது ரொம்ப ரொம்ப தப்பு

எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்கும் இந்த காலத்தில் போய் படிப்பைக் கூட முடிக்காமல் இப்படி ஒரு பெண் இருப்பாளா?

பதினேழு வருஷத்துக்கு மேலே பார்த்து பார்த்து வளர்த்த பெற்றவரை விட இப்போ வந்த எவனோ ஒருவன் முக்கியமாய் தோன்றி தந்தையை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சுவாதி அவமானப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்தான்

பத்தாவது படிக்கும் சின்னப் பெண் நிலவழகிக்கு இதெல்லாம் தெரியவில்லை
தெரிந்தாலும் புரியாத வயசு

ஒரே ஆறுதல் அப்பாவுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்னு நிலாப் பெண் உறுதியாக சொல்வதுதான்

ஆனால் வேற ஊருக்கு அக்கா போய் விட்டாள்ன்னு தெரிந்தவளுக்கு அந்த வீட்டுக்கு வேறு ஆட்கள் குடிவருவார்கள்ன்னு தெரியாதா?

அதெப்படி திருடன்னு நினைத்து அடிப்பாள்? அப்புறம் அவன் கையில் ரத்தம் வருவதைப் பார்த்து முத்தம் கொடுப்பாளா?

விவரம் தெரியாத சின்னப் பெண்ணை ஏமாற்றி முத்தம் வாங்கிய அந்த பொறுக்கி யாரு? பொறுக்கியா இல்லை நல்லவன்தானா?

அப்பாவிடம் செய்த சத்தியத்தை நிலா மீறுவதற்கு அந்த அவன்" காரணமாயிடுவானோ?

எட்டு வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டிக்கிட்டிருந்த சுவாதி குமார் குடும்பம் ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடி எங்கே போயிட்டாங்க?
சுவாதியின் வாழ்க்கையில் ஏதாவது வில்லங்கமா?
பொருக்கியா நல்லவனான்னு அடுத்த எபி ல தெரிஞ்சிடும் ? நிலா வாக்கை காப்பாத்துவாளா ?
சுவாதி வாழ்க்கை கொஞ்சம் வில்லங்கம் தான் போலவே ? நன்றி பானு டியர்.
 
???

காதல், கத்திரிக்கால்லாம் கூடவே கூடாது.... ??? கதையோட தலைப்பே. "காதலால் நெய்திடு" கத்திரிக்கா வேணும்னா வேண்டாம்னு வைக்கலாம்.... காதல் இல்லாம எப்படி???? ???

" எங்கப்பாவுக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டேன்" இது தான் இடிக்குது....??? கண்டிப்பா ஏதோ வில்லங்கமா நடக்க போகுது....???
அதானே காதல் இல்லாம எப்படி ?
ஹாஹா வில்லங்கம் இல்லாத வாழ்க்கை இருக்கா :confused: நன்றி சிந்து sis.
 
அருமையான ஆரம்பம் கிரிஜா???.காதலால் நெய்திடு என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா ஷண்முகம்?????.

பதினாறு வயசு தொடங்கப் போகுது சின்ன பொண்ணு போல விவரம் இல்லாம இருக்காளேன்னு நெனச்சா,இதுதான் காரணமா???.ஃபங்சன் வைக்க போறாங்க,ஆல்பத்தை ப்ரெண்ட்ஸ்ட்ட காட்டனும்னு நிலா ஆசைப்பட,ஃபங்சன் வைக்கலைனாலும் பரவாயில்லை சுவாதி செய்த தப்புக்கு நிலாவை ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு சொல்றாரே நாகராஜ்????.

கதிரவன் தங்கையின் வெகுளித்தனத்தை தெரிந்து கொண்டு அவளுக்கு புரியும்படியா பொறுமையா
எடுத்து சொல்லி சமாதானம் செய்வது அருமை????.அப்பாவின் விருப்பப்படி படிச்சு பெரிய வேலைக்கு போவேன்,அவருக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன் என சொல்லும் நிலவழகி தான் சொன்ன சொல்லை காப்பாற்றுவாளா????.
வாழ்த்துக்கு நன்றி sis ?
ஒரு தவறு நடந்துட்டா அது பத்தின பயம் வரது இயல்புதானே ? பாசம் இருந்தாலும் நாகராஜ் பட்ட அவமானத்தை மறக்க முடியாமல் தவிக்கிறார்.?
நிலவழகி சொன்ன சொல்லை காப்பாத்துவாளான்னு இப்படி முக்கியமான விஷயத்தை கேட்டுட்டீங்களே ? நான் எப்படி பதில் சொல்ல ? நன்றி மேரி sis.
 
Top