Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 24

Advertisement

praveenraj

Well-known member
Member

அப்போது தான் என்ன நடந்தது என்றே புரிய அவன் திரும்பவும் அங்கே தன் அன்னை கண்களில் கோவம் கொப்பளிக்க அவனை அறைந்துவிட்டு அதே கோவத்தோடு திரும்பி தன் கணவரிடமும் ஹரிணியிடமும், "போய் டிரஸ் எல்லாம் உடனே பேக் பண்ணுங்க. நாம உடனே இங்கேயிருந்து கிளம்பனும்" என்று சொல்லி அவர்கள் வீட்டிற்குச் சென்றதும் சொன்னதுப்போலவே அவர்கள் தங்கள் உடமைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர். ஹேமா எவ்வளவோ முயன்றும் தன் அன்னை அவன் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. எல்லாம் எடுத்து வைத்தவர்கள், "டேய் அவினாஷ் எங்களைக் கொண்டுப்போய் பஸ் ஏத்திவிடு" என்று சொல்ல ஹேமாவுக்கு முதன்முறையாக தன் அன்னை தன்னை இப்படி ஒதுக்குவது என்னவோ செய்தது.
அங்கே அவினாஷிடம் இவனைப் பற்றி நிறைய புகார்களை வாசித்துவிட்டு, "டேய் அந்த பொண்ணு போன் நம்பர் கொடுடா"
"அம்மா அது..." என்றவன் கொடுத்தான். அவன் வீட்டிற்கு வர இங்கே ஹேமாக்குத் தான் ஏனோ இறுதியாய் அவள் அழுதுக்கொண்டே சென்றது அவனை என்னவோ செய்தது. ஆக்சுவல்லி இது ஹேமாவிடம் சின்ன வயதிலிருந்தே இருக்கும் குணம் தான். தன்னை யாராவது அசிங்கப்படுத்தினால் உடனே அவர்களை அசிங்கப்படுத்திவிடுவான். இப்போது அவளை முதன்முறை பார்த்ததிலிருந்து எல்லாமும் நினைத்துப் பார்த்தான். மறுநாள் இவன் சோகமாய் ஆபிஸ் வர அவள் கொடுத்துச்சென்ற அவளின் டெபிட் கார்ட் அவன் கண்களில் படவும் நேராக சென்று அவளைத் தேட அவளோ அங்கே இல்லை. என்னவென்று விசாரிக்க அவளோ டீம் மாறிவிட்டதாக சொன்னதும் ஏதோ ஒரு வெறுமை அவனை ஆட்கொண்டது.
லன்ச் பிரேக்கில் அவளைத் தேடிச் சென்றவன் அவளிடம் நெருங்க சுற்றியிருந்த எல்லோரும் விலகிப்போக அவளின் கார்டை அவள் முன் நீட்டியவன், "நான் பேசுனது ரொம்பவும் தப்பான வார்த்தை. நான் மறுக்கவில்லை, இதுக்கு உடனே நீ மன்னிப்பு தருவனும் எனக்கு நம்பிக்கை இல்லை. ப்ளீஸ் இந்த கார்டை நீயே வெச்சிக்கோ" என்று நீட்ட அவளோ, "பணம் எடுத்துக்கிட்டிங்களா மிஸ்டர்?"
"ப்ளீஸ் மௌனிகா பணம் எனக்கு வேணாம். நான் பேசுனது..." என்று முடிப்பதற்குள் அவளோ, "ஒரு நிமிஷம் இருங்க நான் கொண்டுவந்து தரேன்" என்று
போக அவளின் கையைப் பிடித்தவன், "ப்ளீஸ் மௌனி. இப்போ புரியுது நேத்து நீ எப்படி ஃபீல் பண்ணியிருப்பேனு ப்ளீஸ்..." என்றவன் சொல்ல,
"அப்போ இந்தாங்க" என்று அந்த நகையை அவள் நீட்டவும் உண்மையிலே இப்போது சுக்குநூறாக உடைந்தான் ஹேமா. "சரி பணம் நீயே எடுத்துக்கொடு..." என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட இங்கே மௌனியும் நேற்று அவன் பேசிய பேச்சு எல்லாம் நினைத்ததும் ஏனோ இப்பொதும் அழுகை வந்தது. அப்போது அவளுக்கு ஒரு அழைப்பும் வர எடுத்துப் பார்த்தாள். ஹேமாவின் அன்னை தான்,
அவருக்கோ எப்படித் தன்னை அறிமுகம் செய்துகொள்வது என்று புரியாமல் விழித்தவர்,"மௌனிமா நான் ஹேமாவோட அம்மா பேசுறேன்" என்று சொல்ல,

"எப்படி இருக்கீங்க? கால் இப்போ பரவாயில்லையா?" என்று உரையாடினாள்.அவரும் அவளோடு உரையாடிவிட்டு இறுதியில் தன் மகன் செய்த செயலுக்காக மன்னிப்பும் வேண்டினார். ஏனோ இது மௌனிக்கு ஒரு மாதிரி ஆக அதை மறுத்து சாதரணமாய்ப் பேசினாள். அப்போது தான் நேற்று நடந்ததை (ஹேமாவை அடித்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டதை) சொல்ல ஏனோ மௌனிக்கு வருமானது. 'தன்னால் தான் இவர் உடனே ஊருக்குச் சென்றுவிட்டாரோ?' என்று நினைக்க கொஞ்சம் பேசிவிட்டு,"அவன் உன்கிட்ட மன்னிப்பு கேட்டானா?" என்று சொல்ல இவளோ,"ஆமாம்மா" என்றதும், "தயவுசெய்து உடனே மன்னிச்சிடாதடா. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலையவிட்டு மன்னி" என்று சொல்ல ஆச்சரியமாய் மௌனி பார்க்க,
"நீ மன்னனிச்சா தான் நான் திரும்ப
அவன் கிட்ட பேசுவேன்னு அவனுக்கும் தெரியும். அண்ட் அவன் எனக்காக மட்டும் இல்ல உண்மையிலே அவன் செஞ்ச தப்பு அவனுக்கு புரியனும். சோ மன்னிச்சிடாத..." என்றதும்
என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தாள் மௌனி. "அண்ட் நான் வாங்கிக் கொடுத்த நகை அது. அது முழுக்க முழுக்க என் வீட்டுக்காரர் காசு. சோ நீ அதுக்கு யாருகிட்டயும் காசு கொடுக்க வேணாம். அத நீ ஓசியிலையும் வாங்கல. நான் உண்மையான பாசத்தோட வாங்கிக்கொடுத்தது. ப்ளீஸ் வெச்சிக்கோடா... அவன் மேல இருக்க கோவத்துல என்னைத் தண்டிக்காத..." என்றதும், மௌனிக்குத் தான் சொல்லமுடியாத நிலை. "இல்லம்மா நான் பத்திரமா வெச்சிப்பேன். அண்ட் காசும் கொடுக்க மாட்டேன். ப்ரோமிஸ்" என்று சொல்ல இவர்களுக்குள் ஒரு புதிய உறவு உருவானது. மறுபுறம் ஹேமாவோ தினம் தினம் இவளின் மன்னிப்புக்காக ஒரு பார்வையைப் பார்ப்பான். இவளுக்கோ மன்னித்துவிட வேண்டும் என்று கூட தோன்றும் ஆனால் அவன் அன்னை தன்னிடம் சொல்லாமல் அவனை மன்னிக்கக் கூடாது என்று சொல்ல இவளும் அமைதிக் காத்தாள்.

...............................................................................
கடும் கோவத்தில் நேராக ராஜீவிடம் சென்றாள் சித்தாரா. சென்று நடந்த அனைத்தையும் சொல்ல, அவனோ அதை சீரியஸாக எடுக்காமல்," விளையாடாத சித்து.அம்மா அப்படியெல்லாம் இல்ல அண்ட் மோரெவர் நான் உன்னைத்தான் கல்யாணம் செஞ்சிப்பேன்" என்று சொல்ல,
"ராஜீவ் என்னால உன்கிட்ட ஒரு மாதிரியும் இல்ல உன் அம்மா கிட்ட ஒருமாதிரியும் எல்லாம் இருக்க முடியாது. ஒருவேளை என்னை கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு வந்து கொடுமைப் படுத்தி துரத்தாலம்ன்னு நெனச்சா அது நிச்சயம் நடக்காது..."
"என்ன பேசுற சித்தாரா? என் அம்மாவுக்கு கொஞ்சம் பிடிவாதம் தான். இல்லைனு சொல்லல அதுக்குனு உன்னைத் துரத்தி அவளை கல்யாணம் செஞ்சி... போ, நிறைய சீரியல் பார்ப்பியோ?"
"அப்புறோம் எதுக்கு அவளை என்கிட்டே இவ தான் என் மருமகள்னு சொல்லணும்?"
"அதை நீ அவங்க கிட்ட தான் கேட்கணும்"
"நான் எவ்வளவு சீரியஸா பேசுறேன், நீ விளையாடுறியா?"
"இப்போ என்ன பண்ணனும் நான்? நான் தான் சொல்லிட்டேனே,நமக்குத் தான் கல்யாணம்னு, நீ என்னடானா...?"
"உனக்காக நான் என் கேரீர் கூட விடத் தயாரானேன் ராஜீவ்..."
"சோ இப்போ நான் என்ன பண்ணனும்? என் அம்மாகிட்ட சண்டைபோடணுமா?"
"உனக்கு இன்னும் என் ஃபீலிங்ஸ் புரியில தானே? அவங்க ஏதோ பிளான் பண்றங்க..."
"அவங்க என்ன வேணுனாலும் பண்ணட்டும். கல்யாணம் நமக்குத் தான். போதுமா?"
"ஓகே அப்போ ஆப்டர் மேரேஜ் நாம சென்னை போய் செட்டில் ஆகலாம்"
"வாட்? இதைப்பத்தித் தான் நாம ஏற்கனவே டிசைட் பண்ணிட்டோமே. இப்போ ஏன் திரும்ப அதைக் கிளறுற?"
"சோ நீ மாட்ட ரைட்?"
"என்ன சித்தாரா பிரச்சனை உனக்கு? எல்லாம் நல்லா தான் போகுது. திடீர்னு வந்து பிரச்சனைச் செய்தால் என்ன அர்த்தம்?"
"நான் பிரச்சனைச் செய்ய வரல ராஜீவ்,பிரச்சனை வராம இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுனு சொல்றேன்..."
"என்ன முன்னெச்சரிக்கை? இங்க இருந்து ஓடிப்போறதா?"
"என்னால இங்கேயே இருந்து இவங்களைத் திருத்தி நல்ல மனுஷங்களா மாத்தலாம் முடியாது. அது என் வேலை இல்ல. எனக்கு அவசியமும் இல்ல..."
"என்ன சித்தாரா யாரோ மூணாவது மனுஷங்க மாதிரி பேசுற? அவங்க என் அம்மா"
"அதே தான் நானும் சொல்றேன். சும்மா இருந்த என்கிட்டே வந்து காதல் அது இதுனு சொல்லி கல்யாணம் வரைக் கொண்டுவந்து என் கேரீரை ஸ்பாயில் பண்ணப் பார்க்கிறாயா?"
"என்ன பெரிய கேரீர்? நான் பார்த்து உனக்கு சான்ஸ் தரலைனா உன் கேரீர் ஒண்ணுமே இல்ல..."
ஏனோ இந்த வார்த்தை சித்தாராவை ரொம்பவும் சீண்டியது, "மிஸ்டர் ராஜீவ், என் கேரீற்கு சான்ஸ் நீங்க தந்தது தான். இல்லைனு சொல்லல, பட் நீங்க ஒன்னும் எனக்குச் சொல்லிக்கொடுக்கல...மைண்ட் இட். அண்ட் மோரெவர் என் டிசைன்ஸ் எல்லாம் பிடிச்சதுனால நீங்க தான் என்னை அப்ரோச் செஞ்சீங்க, நான் ஒன்னும் எனக்கு சான்ஸ் தாங்க தாங்கனு கெஞ்சல, மைண்ட் இட்"
"ஒத்துக்கறேன், நீயே இப்போதான் ஆரமிச்சு இருக்க. என்னமோ நீ பெரிய டாடா பிர்லா மாதிரியும் உன் கேரீரை நான் ஸ்பாயில் பண்ண மாதிரி பேசுற? டப்பா ஸ்டார்ட் அப்..."
"நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணது பழகியது, ஏன் இந்த கல்யாணம் வரை எல்லாத்துக்கும் அந்த டப்பா ஸ்டார்ட் அப் தான் காரணம் மிஸ்டர் ராஜீவ். உங்களுக்கு எல்லாம் மறந்திடுச்சினு நெனைக்கிறேன். செலெக்டிவ் அம்னீசியாவோ?"
"இதுக்குத் தான் என் அம்மா அன்னைக்குச் சொன்னாங்க படிச்ச பொண்ணெல்லாம் வேணாம்னு" என்று நிறுத்த,
"கமான் சொல்லு. முழுசா சொல்லு, அப்போ உன் அம்மாக்கு என்னைப் பிடிக்கலைனு உனக்கு ஏற்கனவே தெரியும். அவங்க வேற பிளான் பண்றதும் உனக்குத் தெரியும்?"
"சித்தாரா நீ தான் என்னென்னவோ பேசுற, எதையெதையோ முடிச்சுப் போடுற. இப்போ நான் இந்த மேரேஜை நிறுத்தினாலும் எனக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. நாளைக்கு உனக்குத் தான்..." என்று அவன் நிறுத்த,
"ஓ உனக்குத் தான் உடனே பொண்ணு இருக்கு கல்யாணம் பண்ணிப்ப. ரிமெம்பேர் எனக்கும் தான் ரொம்பவும் சந்தோசம். ஏன்னா எனக்குப் பிடிச்சதை நான் செய்வேன். என்னை யாரும் கண்ரோல் செய்ய முடியாது" என்றாள் அவள்.
"ஓ அப்போ கால்-ஆப்(நிறுத்து) பண்ணு" என்று ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தான்.(இவள் சீரியஸாய்ச் சொல்லுகிறாள் என்று அவன் நினைக்கவில்லை)
உடனே தன் அத்தை மாமாவை அழைத்தவள், எல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல அவர்களோ என்ன செய்வதென்று புரியாமல்,"கொஞ்சம் பொறுமையா இரு சித்து. நாங்க வரோம். வந்ததும் பேசலாம்..."
"என்ன சொன்னாங்க? பேசலாம்னு தானே சொன்னாங்க. இப்பயும் சொல்றேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கம் லெட்ஸ் சால்வ் திஸ்" என்றான் ராஜீவ்.
"ராஜீவ் என்னைப் பற்றி உனக்கு முழுசா தெரியாது. நான், என் வாழ்க்கையில என் சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. இப்போ எனக்கு இந்த மேரேஜ்ல இண்ட்ரஸ்ட் இல்ல" அவள் நிறுத்தி நிதானமாய்ச் சொல்ல அந்த விஷயத்தின் சீரியஸ்னெஸ் இப்போது தான் ராஜீவுக்குப் புரிந்தது.
"விளையாடாத சித்தாரா. ஆர் யூ சீரியஸ்?"
சிரித்தவள், "அஸ் ஆல்வேஸ். இது ஒத்துவராது ராஜீவ். இன்னைக்கே இப்படிச் சொல்ற நீ, நாளைக்கு வேலைக்கு போகக்கூடாதுனு சொல்லுவ, வீட்டுலையே இருன்னு சொல்லுவ, ஒருவேளை நமக்கு கல்யாணம் நடந்திருந்ததுனு வெச்சிக்கோ நான் என் பேரெண்ட்ஸ் எல்லோருக்காகவும் உன்கூடவே வாழணும்னு நிர்பந்தம் வரலாம். சோ அப்படி வாழ்ந்தா நான் கொஞ்ச கொஞ்சமா என் சுயத்தை இழந்து மொத்தமாய் உன் பேச்சை மட்டும் கேட்டு நடக்குற மாதிரி வரலாம். உன் பேச்சைக் கேட்குறதுல தப்பில்லை ஆனா நான் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது எல்லாமும் நீ தான் டிசைட் பண்ணுற சூழ்நிலை வரலாம். ஒருவேளை அப்போ இந்த சண்டை நமக்குள்ள வந்தா, அப்போ இந்த முடிவு, அதாவது நாம பிரியறது ரொம்ப காம்ப்ளிகேட் ஆகிடும். ஆனா இப்போ அப்படி ஒன்னும் இல்ல. சோ லெட்ஸ் பார்ட் ஆப் (நாம் பிரிந்துவிடலாம்)"
......................................
துவாராவுடன் விளையாடிக்கொண்டிருந்த இளவேனில் துவாராவையும் சரித்திராவையும் மாறிமாறி பிடித்து அங்கே ஓடிக்கொண்டிருந்தாள். இவளின் சிரிப்பொலியில் இவ்வளவுநேரம் தூங்கிக்கொண்டிருந்த சரித்திராவின் தாத்தா முழித்துப் பார்க்க அங்கே தன் பேத்தியின் முகத்தில் உண்மையான சந்தோஷத்தையும் சிரிப்பையும் பார்த்து அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னே கலகலப்பானவள் தான், சிரித்தாள் அழகுப் பதுமை தான். இருந்தும் எப்போதும் அவளிடம் இருக்கும் அந்த மென் சோகம் ஏனோ அவருக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். காலம் முழுவதும் இப்படியே சிரித்துக்கொண்டு இருந்தால் அதுவே அவருக்குப் போதும். ஏற்கனவே ஒரு தந்தையாய் மாமனாராய்த் தான் தோல்வியை தானே சந்தித்து இருக்கிறார்.அட்லீஸ்ட் ஒரு தாத்தாவாக ஆவது தன் கடமைகளைச் சரியாக செய்ய வேண்டுமே? தான் செய்தால் மட்டும் சரியாகிவிடுமா?அதற்கு அவளும் தானே ஒத்துழைக்க வேண்டும். ஏதேதோ யோசனையில் மூழ்கினார்.
'கடந்த மாதம் வரை எத்தனை முறை கேட்டும் முடியாது என்று மறுத்தவள் இப்போது அவளாகவே இந்த பயணத்தை ஏற்படுத்தி தன்னுடன் பயணிக்கிறாள் என்றால் நிச்சயம் இதில் பாசம் மண்ணாங்கட்டியெல்லாம் கிடையாது. அது அவளுக்கு வரவும் வராது. இன் பேக்ட் வரவும் கூடாது. இதில் ஏதோ ஒளிந்திருக்கிறது. அது என்னவென்று தான் அவருக்குப் புரியவில்லை. இப்போது அவள் முகத்தில் உண்மையான சந்தோசம் . இதற்கு காரணம் என்ன? ஓடியாடி விளையாடும் இந்த சிறிய பிள்ளையா?(இளவேனில்) இல்லை அருகில் இருக்கும் இந்த இளைஞனா?' இப்போது மீண்டும் அவனைப் பார்க்கிறார். 'ஆள் நன்றாக தான் இருக்கிறான். எப்படியும் தன் பேத்தியைக் காட்டிலும் மூன்று வருடமாவது பெரியவனாக இருக்க வேண்டும். அவள் பார்வை அடிக்கடி அவன்மீது சென்றுவருவதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். மூச்சை இழுத்து விட்டவர், என்ன மாதிரியான கற்பனை இது? ஒருவேளை அவன் யாரோ இவள் யாரோவாக இருந்தால்? இல்லை ஒருவரை ஒருவருக்கு ஏற்கனவே தெரியுமா?' என்று யோசித்தவர் எழுந்து ரெஸ்ட் ரூம் போக, அவரோ கொஞ்சம் தள்ளாடினார். உடனே துவாரா அவரைத் தங்கினான். "வாங்க என்கூட" என்று அவரை அழைத்துச் சென்றான். இளவேனிலிடம் திரும்பி, "தங்கப்புள்ள இங்கேயே ஆண்ட்டி கூடவே இருக்கனும். நான் வந்திடுறேன்" என்று அவன் அவரை அழைத்துச் சென்றான்.
அவளும் உடனே சரித்திராவிடம் செல்ல அவளோ கேள்விகளைக் கேட்டாள்,"உங்க பேரு என்ன?"
"இளவேனில்"
"ஆ சூப்பர் பேரு. பிலே ஸ்கூல் போறீங்களா நீங்க?"
இல்லையென்பது போல் தலையை ஆட்ட, "ஓ அப்போ இனிமேல் தான் போவீங்களா?"
புரியாமல் பார்த்தாள் இளவேனில்.
"சரி உங்க அப்பா அம்மா பேரு என்ன?"
"விவான் நித்யஸ்ரீ"
கொஞ்ச நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருக்க துவாராவும் அவரும் வந்து அமர்ந்தனர்.
கொஞ்ச நேரம் அமைதியாக அவரையே பார்த்தவன், பேச்சைத் தொடங்கினான்,
"தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா?"
சரித்திராவும் இப்போது திரும்பி அவர்களைப் பார்த்தாள்.
"இந்த ஏஜ்ல நீங்க ட்ராவல் பண்ணனுமா? சாரி நான் தப்பா கேட்டிருந்தா..."
"நல்லா கேளுங்க துவாரா. அதுனால தான் கோவமே" - சரித்திரா
அவளின் துவாரா என்ற விளிப்பில் நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் பொருளை உணர்ந்து,"உங்க ஃப்ரண்ட்ஸ் அப்படித் தானே கூப்பிட்டாங்க. அது தானே உங்க பேரு?"
'என்னாமா நடிக்கிறாடா சாமி' என்று நினைத்துக்கொண்டார் அவளின் தாத்தா.
"துவாரகேஷ்"
"சரித்திரா"
பிறகு இருவரும் பொத்தாம் பொதுவாக தங்களைப் பற்றியும் தங்கள் படிப்பைப் பற்றியும் பேச இளவேனில் பசிக்கிறது என்று சொல்லவும் துவாரா தன் பையில் இருந்து ப்ரூட்ஸ் எடுத்து அவளுக்குப் பிடித்த மாதுளையை உரித்து அந்த முத்துக்களை ஒரு சின்ன பௌலில் கொட்டிக் கொடுக்க அமைதியாக சாப்பிட்டாள். மீதியிருந்ததை அவருக்கும் கொடுத்து சரித்திராவுக்கும் கொடுத்தான் துவாரகேஷ்.
............................................................
"இப்போ என்ன நடந்துச்சின்னு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ற சித்து? இப்போ போய் கால் ஆப் பண்றேன்னு சொல்ற? என்ன ப்ளாக் மெயில் பண்றியா?"
"ப்ளாக் மெயில் வைட் மெயில் எல்லாம் எனக்குத் தெரியாது மிஸ்டர் ராஜீவ். நான் என் முடிவைச் சொன்னேன்"
"புரியாம பேசாத சித்தாரா, என் அம்மா சொன்னா இந்த கல்யாணம் நின்றுமா?"
"அது தான் நின்றுச்சே"
"இப்போ என்ன என் அம்மாகிட்ட பேசணும் அவ்வளவு தானே? வா பேசலாம்"
"அது நான் சொல்லும்போதே செஞ்சியிருக்கணும். இட்ஸ் டூ லேட்"
"அப்படி என்ன அவசரம் உனக்கு? பொறுமையா டீல் பண்ணையிருக்கலாம் தானே?"
"ஓ நான் பொறுமையா நடந்திருக்கலாம். நீங்க ரொம்ப பொறுமையா இல்ல நடந்துகிட்டீங்க?"
"நான் சம்மதிக்காம எப்படி எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும்?"
"இப்போ நான் எதுக்கு இந்த மேரேஜை கால் ஆப் பண்ணேன் தெரியுமா?"
"என் அம்மானால"
சிரித்தவள்,"நமக்குள்ள நடந்த இந்த கான்வெர்சேஷனை திரும்ப நினைத்துப் பாருங்க அப்போ புரியும்"
"என்ன புரியனும்?"
"நீங்க என்னுடைய ஸ்டார்ட் அப்பை டப்பா ஸ்டார்ட் அப்புனு சொன்னீங்க. எனக்கு என்னமோ கேரீர் பிச்சைப்போட்ட மாதிரி பேசுனீங்க. யூ நாட் ஒன்லி இன்சல்டட் மீ பட் ஆல்சோ மை பொடென்ஷியல், மை ஸ்கில்ஸ், மோரெவர் யூ வாண்ட் டு சபோர்டினேட் அண்ட் சப்ரெஸ் மீ, மை டேலேண்ட்ஸ். தட்ஸ் ஆல். குட் பை"(நீங்க என்னை மட்டும் அசிங்கப்படுத்தல, என்னுடைய திறமையையும் என் அறிவையும் அசிங்கப்படுத்திடீங்க. அதுமில்லாம என்னை அடிமைப்படுத்த பார்க்கறீங்க)
அதற்குள் தங்கள் குடும்பம் வந்துவிட எவ்வளவோ பேசியும் முடியாது என்று இவள் சொல்ல இரு குடும்பமும் சேர்ந்து கல்யாணத்தை நிறுத்தினர். லீகலாய் இந்த பிரச்னையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள்.
ஹனி மூன் ட்ரிப்புக்காக நார்த் ஈஸ்ட் போக பிளான் செய்து இந்த ட்ரைனை புக் செய்திருக்க இப்போது தன்னுடைய டிக்கெட்டை மட்டும் கன்பார்ம் செய்துவிட்டு தனியே ஹனி மூன் செல்கிறாள் சித்தாரா.
அங்கே இறுதிநேரத்தில் ராகவி ராஜீவ் திருமணம் நடந்துவிட்டதாய்க் கேள்விப்பட்டவள் 'நல்ல வேளை இவனை நம்பி நான் கல்யாணம் என்னும் ரிலேஷனுக்குள் நுழையவில்லை. இல்லையேல் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதற்குச் சமமாகியிருக்கும் என் முடிவு' என்று தேற்றிக்கொண்டாள். இவளின் மாமா அத்தைக்குத் தான் அதிக வருத்தம். இருந்தும் சிறுவயதிலிருந்தே எல்லா முடிவுகளையும் அவளையே எடுக்க வைத்ததன் காரணத்தினால் மேலும் இது வாழ்க்கைப் பிரச்சனை என்பதாலும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.
இப்போதைக்கு அவளுக்கு வருத்தம் இல்லை தான். இருந்தும் தவறான முடிவை எடுக்கவிருந்தோமே என்று நினைத்து தன் மீது கொஞ்சம் கோவம் வந்தது.
..........................................................
மணியும் 06 .20 ஆக வண்டி குர்டா ரோடு ஜங்சன் என்னும் இடத்தில் வந்து நின்றது. இங்கே வண்டி 20 நிமிடங்கள் நிற்கும். போதாக்குறைக்கு 'மாஹி' வேறு ஒடிசா கடற்கரையைச் சூறையாடிக்கொண்டு நல்லவேளையாக எதிர்பாத்த படி பெரிய சேதாரங்களை ஏற்படுத்தாமல் திசையைத் திரும்பி மீண்டும் கடலை நோக்கியே பயணிக்கத் தொடங்கிவிட்டது.
புவனேஷ்வர் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்து இருந்தான் துஷ்யந்த். அவனுடன் வந்தாள் யாழினி. இருவரும் ஒன்றாக படித்தவர்கள். இவன் இந்த மாதிரி நார்த் ஈஸ்ட் டூர் என்று சொன்னதுமே தானும் வருவேன் என்று அடம்பிடித்து வந்துவிட்டாள். நல்ல தோழி. பாய் பெஸ்டி கேர்ள் பெஸ்டி இருவரும். அல்ட்ரா மார்டன் பொண்ணு. கல்யாணம் குடும்பம் என்னும் சிறு கூட்டிற்குள் வாழ பிடிக்காத நவயுக மங்கை.
"எப்பா கொஞ்சம் இதையும் (யாழினி) உன் கூடவே கூட்டிட்டுப் போய்க் கொஞ்சம் புத்திமதி சொல்லி அனுப்பு" என்று அனுப்பிவைத்துள்ளார்கள் அவள் வீட்டில். ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று மண்டையை மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டு வந்துவிட்டான். "ஐயோ நிம்மதியா ஃப்ரண்ட்ஸோட போலாம்னு இருந்தேன். இந்த பூனையையும் என் மடியில கட்டிவிட்டுட்டாங்க" என்று புலம்பிக்கொண்டிருந்தான் துஷி.
"ஏன்டி எப்பயுமே நான் கூப்பிட்டா வரமாட்டேன் அது இதுனு சீன் போடுவ? இப்போ மட்டும் என்ன உடனே வந்து தொத்திகிட்ட?"
"மச்சி அது அஸ்ஸாம்னு சொன்னியா அது தான் வந்துட்டேன்"
"ஏன் உனக்கு அசாம் அவ்வளவு பிடிக்குமா?"
"பின்ன எப்பேர்ப்பட்ட ஊரு அது"
"அப்படி என்ன ஸ்பெஷல்?"
"காமக்கியா டெம்பிள் இருக்கும் ஊருடா அது?"
"புரியில?"
"அது அம்மனோட ஷக்தி பீடத்துல ஒரு இடம். அங்கே சாமியே யோனி ஷேப்ல தான் இருக்கும். அந்த காலத்துல மக்களோட ரசனையோ ரசனை" என்று அவள் சொல்ல,
"ஏய் என்னடி இப்படி எல்லாம் பேசுற? உன்னை ஆண்ட்டி திட்டுறதுல தப்பே இல்ல"
"அப்பப்பா நீங்க எல்லாம் அப்படியே யோக்கிய சீலனுங்க பாரு, கொஞ்சம் மூடு" என்பதைப்போல் அவள் சைகைச் செய்ய, "கடவுளே என்னை என் ஆளோட சேர்த்து விடுறியோ இல்லையோ தயவு செய்து இவளுக்கு ஒரு ஆளைப் பிடிச்சு விடு. முடியில என்னால ஐ அம் பாவம்"
அப்போது அங்கு தூரமாய் நிறைய மாணவர்கள் நிற்க, "என்ன பார்க்குற அவங்களும் நம்ம கூடத்தான் வராகலாம். யூ நோ வாட் அவங்க எல்லாம் டெம்பிள் ஆர்கிடெக்சரை பார்க்க நார்த் ஈஸ்ட் தான் வாரங்களாம்" என்றாள்.
"இதெல்லாம் உனக்கு எப்படிடி தெரியும்?"
"நீ போன் பேச போயிட்டே செம போர். அதுதான் நான் அவங்ககிட்ட பேச்சு கொடுத்தேன்"
"முடியில"
"இதுக்கே இப்படின்னா எப்படி பாஸ்? இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு"
'கடவுளே ஊருக்குள்ள பல பொண்ணுங்களை கரெக்ட் பண்ணி பிலே பாயாய் இருக்குறவங்க எல்லாம் நல்லா இருக்கும் போது, ஒரே ஒரு கேர்ள் பெஸ்டி வெச்சிக்கிட்டு நான் படுற பாடிருக்கே. ஐயோஐயோஐயோ... முடியில...'
"ஹா ஹா ஹா"
"ஆமா உன் ஆளும் அதுல தான் வருதா? சொல்லு வேணுனா ஹெல்ப் பண்றேன்" என்ற யாழுக்கு,
"தெய்வமே நீ கொஞ்சம் உன் வாயைப் பொத்துனாப்புல வந்தா அதுவே எனக்கு நீங்க செய்யுற பெரிய உதவி"
"ஹா ஹா ஹா"
'எப்பா லோகோ பைலெட்டு சீக்கிரம் வண்டியை எடுத்துக்கிட்டு வாப்பா முடியில'
.........................................................
லோகேஷிற்கு நடந்ததையெல்லாம் நினைக்கையில் மிகவும் கோவம் தான் வந்தது. அமைதியாக நிற்க இஸ்மாயில் கையில் டீயோடு வந்தான்,
"இந்தா கொஞ்சம் பிடி"
அவன் வாங்கிப் பருக, பெனாசிர் தன் வீட்டில் போன் பேச அங்கே வந்து நின்றாள். போன் பேசும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் இஸ்மாயில். "கொஞ்சம் அளவா பாருடா ரொம்பவும் வழியுது" என்றான் லோகேஷ்
"ஹி ஹி"
"நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். நீயும் ரொம்ப வருஷமா அவளை டாவு மட்டும் தான் அடிக்கிற. போய்ப் பேச வேண்டியது தானே?"
"இல்லடா என் குடும்பத்தைப் பற்றி எல்லாம் தெரிஞ்சா என்னைய கல்யாணம் பண்ணிப்பாளான்னு..."
"முதல்ல பேசு. அப்புறோம் மத்ததெல்லாம் பார்க்கலாம்"
"கண்டிப்பா அசாம் போனதும் பேச வேண்டியது தான்"
................................................................
"நீங்க ஸ்டோரிய கண்டினு பண்ணுங்கப்பா. அப்புறோம் மௌனி அவனை மன்னிச்சியா இல்லையா?" என்றான் ஜிட்டு,
"அது..." (பயணங்கள் முடிவதில்லை...)
 

Advertisement

Top