Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -24

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 24

'புத்தம் புது காலை..பொன்னிற வேளை' என்று பாட வேண்டும் போல் இருந்தது சம்யுவுக்கு. அவ்வளவு அழகான காலை பொழுது.

வழக்கம் போல் ஆறு மணிக்கெல்லாம் எழுந்தவள் சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வர ..இளம் காலை காற்று வந்து தொட்டு தழுவி சென்றது.

அப்படியே பால்கனி அருகே வந்து நின்றவள் ..காலை கதிரவனின் ஒளியில் தங்கமாய் ஒளிர்ந்த மேகக்கூட்டங்களையும் மலை முகடுகளையும் ரசித்துக் கொண்டு நின்றாள்.

காண கண் கோடி வேண்டும் அக்காட்சியை பார்க்க!
ப்ரித்வி இங்கு வந்தால் எப்போதும் நன்கு தூங்குவான்.. வருவதே ரிலாக்ஸ் செய்யத்தானே!

அதனால் ஒரு நாளும் சீக்கிரம் எழுந்ததில்லை .

ஆனால் முந்தைய இரவோ உறக்கம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாலும் காலையில் வெகு சீக்கிரமே முழிப்பும் வந்து விட்டது.

சம்யுவின் அறைக் கதவு திறக்கும் ஒலி கேட்டதும்.. தன் அறைக்குள் இருந்த காபி மேக்கரில் சூடாக காபி தயாரித்தவன் இரு கோப்பைகளில் அதை ஊற்றி எடுத்துக் கொண்டு சம்யு நிற்கும் இடம் நோக்கி சென்றான்.

பின்னால் யாரோ வரும் அரவம் கேட்க.. திரும்பிய சம்யு இவனை பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகை தர ... அன்றைய விடியலே அர்த்தமானதாக ஆனது போல் இருந்தது ப்ரித்விக்கு.

பதிலுக்கு ஒரு புன்னகை செய்தவன் மௌனமாய் காபி கோப்பையை நீட்ட .. பெற்றுக் கொண்ட சம்யுவின் விரல்களில் இருந்த குளுமை மெல்ல இவன் மனதுக்குள் பரவ தொடங்கியது.

எதுவும் பேசாமல் மெல்ல ஒவ்வொரு மடக்காக காபியை அருந்தியவர்கள் எதிரே காண கிடைத்த காட்சியை பார்த்திருக்க ..

மௌனம் அவர்களுக்கிடையே ஆட்சி செய்தது.

இது வேலைக்காகாது என்று நினைத்தவனாய் வழக்கம் போல் அவளை வம்புக்கிழுக்க தொடங்கினான்.
"அந்த மலை உச்சில அப்படி என்ன தெரியுது ? கண்ணெடுக்காம பாக்குற ? உங்க செத்து போன மூதாதையர்கள் யாரும் தெரியறாங்களோ "

" இல்லை! உன்னோட மூதாதையர்கள் தான் தெரியறாங்க .அங்க பாரு " என்று சம்யு காட்ட ..அங்கே இரு குரங்குகள் மரத்திலிருந்து தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன .

"அதோ கீழே நிக்குதே அது உன்னை மாதிரியே இல்லை? எவ்வளவு சேட்டை பண்ணுது பார் ..மேலயும் கீழையுமா எத்தனை தடவை தாவுது? ஒரு இடத்தில நிக்கிதா? கெடையாது! அந்த மரத்தில இருக்கிற பழத்தையெல்லாம் பறிச்சு கீழே போட்டுக்கிட்டே இருக்கு ஆனால் சாப்பிட மாட்டேங்குது பாரு." அதற்கேற்றாற்போல் அக்குரங்கு மேலும் கீழும் தாவி எல்லா சேட்டைகளும் செய்ய..

"நோ.. நோ.. அங்க பாரு! மேல நிக்குதே.. அது பாக்க உன்னை மாதிரியே இருக்கு. அதே முகவெட்டு, பெரிய கண்கள், அதை சுத்தி மை போட்டமாதிரி வேற இருக்கு பார். உன் கண்ணை பார் அதோட கண்ணை பார் ..சேம் ஐஸ்! " என்றவன் அவள் முறைத்து பார்க்கவும் அருகே வந்து கிசுகிசுப்பான குரலில் "ப்ளீஸ்..சம்யு அப்படி பாக்காதே !"என்றான்.

அவ்வளவு அருகில் அவனை பார்க்க .. அவனது ஆழமான குரல் ஏதோ செய்ய ..இவளுக்கு உள்ளுக்குள் ஒரு கிளர்ச்சி தோன்றியது .
அவள் முகத்தையே பார்த்தவன் " அப்படி பாக்காதன்னு சொல்றேன்ல ..கொஞ்சம் பயமா இருக்கும்மா " என்று சொல்லவும் "உன்னை.." என்று அவனது தோளில் ஒரு அடி வைத்தவள், முதலாம் குரங்கின் தாடையில் சிறு கற்றையாய் முடி இருக்க " பாரு ப்ரித்வி அதோட தாடி கூட உன்னை மாதிரியே இருக்கு " என்றாள் அவனை கலாய்க்கும் உற்சாகத்தோடு.

"என்னை ரொம்ப சைட் அடிக்கிற மாதிரி தெரியுதே!"

"வாட் ?'

"ஆமாம் என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்க போல அதான் பார்க்கிற இடத்தில எல்லாம் என்னை மாதிரியே தெரியுது."

"உன்னை குரங்கோட கம்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன் ..அதுல கூட எப்படி நீ பெருமை பட்டுக்கிற "

"எப்பவுமே எல்லா கெட்டதிலயும் ஒரு நல்லது இருக்கும்னு ஒரு பெரிய அறிஞர் சொல்லியிருக்காரு "

"கெட்டதில என்னடா நல்லது? நல்லதுல என்னடா கெட்டது ன்னு எங்க தலைவர் எஸ். ஜெ .சூர்யா சொல்லியிருக்காரு " என்றதும் வாய்விட்டு சிரித்தான் ப்ரித்வி.

அவனது சிரிப்பு.. அழுத்தமான இதழ்களுக்கிடையே இருந்து பளீரிட்ட பல்வரிசையும் மின்னும் கண்களுமாக அந்த சிரிப்பு சம்யுவுக்குள் ஏதேதோ மாற்றங்களை உண்டு பண்ண ...முயன்று பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

இவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலே பரவாயில்லை என்று தோன்றியது.

அவளது திடீர் மௌனம் கண்ட ப்ரித்வி அவள் மனதை புரிந்தவனாய் "ஏய் அங்க பாரு ..மூணாவதா ஒன்னு வருது" எனவும் மறுபடி குரங்குகளிடம் பார்வையை திருப்பினாள் சம்யு ..

"அது கட்டாயம் உங்கப்பாதான் " எனவும் மறுபடி சம்யு முறைக்க .."பாரு அதை பாத்ததும் தாடி வச்ச குரங்கு பிச்சுக்கிட்டு ஓடிடுச்சி.. மைக் மோகன பாத்து நான் ஓடின மாதிரி" என்றதும் சம்யுவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் கீழே இருந்து ராகேஷ் அழைக்கும் குரல் கேட்க " ராக்கி பாய் எழுந்துட்டாரு போல.. நான் கீழே போறேன். நீ ஷாந்தினி மேம் கூட்டிட்டு சாப்பிட வா " என்றவன் கீழிறங்கி வர ..சற்று நேரத்தில் சம்யுவும் ஷாந்தினியை அழைத்துக் கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.

உண்டு கொண்டே நால்வரும் அன்றைய வேலைகள் குறித்து விவாதிக்க .. இரண்டு இரண்டு பேராக போய் ஒவ்வொரு இடத்திலும் விசாரிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டதும் "ராக்கி சார் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம் .. சம்யுவும் ப்ரித்வியும் ஒண்ணா போகட்டும் " என்று ஷாந்தினி கோர்த்துவிட ..

அவள் காதருகில் வந்து "தெய்வமே ! நீங்க செய்யும் உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறென்னே தெரியலையே ! என் கூட பிறந்த அக்கா இருந்தால் கூட இப்படி ஒரு உதவி செய்வாங்களானு தெரியலையே " என்று சிவாஜி கணேசன் மாடுலேஷனில் சொல்ல ..

" ஆக்சுவலி .. இந்த மாதிரி உதவி செய்றவங்களை அக்கான்னு சொல்லமாட்டாங்க ..மாமான்னு சொல்லுவாங்க . உன் மைண்ட் வாய்ஸ் அப்படி சொல்றது எனக்கு நல்லா கேக்குது."

" மேம் ..உங்களை போய் அப்படி சொல்லுவேனா ? எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஆனால் இப்ப நம்பறேன் .அந்த கடவுள் தான் உங்கள அனுப்பியிருக்காரு."

"கடவுளை எல்லாம் இழுக்காத .. இப்போ நானே கழண்டுக்கலன்னா நீயே கழட்டி விட்டுடுவேன்னு தெரியும். அதனால் தான் ராக்கி சாரோட போறேன்னு சொன்னேன்."

"மேம்.. என்ன பத்தி இவ்வளவு மோசமா நெனைச்சிட்டீங்களே ! நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன் ? " என்று மறுபடி சிவாஜி குரலில் சொல்ல ..

" என்னவோ செய் . ஆனா அவ உன் மேல செக்க்ஷன் 354 ஈவ் டீசிங் கேஸ் போடாம இருந்தா சரி. " என்றபடி கைப்பையை எடுத்து கிளம்பினாள் ஷாந்தினி . அவர்கள் இருவர் உபயோகத்துக்கு எஸ்டேட்டில் இருந்து வேறொரு காரை வரவழைத்திருந்தான் ப்ரித்வி.

மற்ற இருவரும் அதில் ஏறிக்கொள்ள ..சம்யு ப்ரித்வியின் காரில் ஏறிக்கொண்டாள்.

அந்த வழக்கில் கொலையுண்டவன் வாழ்ந்து வந்த கிராமத்திற்கு சென்று விசாரிக்க சென்றனர்.

மலைப்பாதையில் கார் வளைந்து வளைந்து செல்ல ..பெரும்பாலான இடங்களில் மண் சாலைதான்.

இருந்தும் கொஞ்சம் கூட அசைவில்லாமல் லாவகமாக அவன்கார் ஓட்டுவதை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாள் சம்யு

செல்லும்வழியில் அம்ரிதாவின் போன் வர ..உற்சாகத்துடன் போனை எடுத்து பேசினாள்சம்யு.
"ஹாய் அக்கா .. எப்படி இருக்க ?" எனவும் மறுபுறம் இருந்து சுரத்தில்லாமல் வந்தது அம்ருவின் குரல்.

"இருக்கேன் சம்யு. நீங்கல்லாம் நல்லா இருக்கீங்கள்ல?"

"நல்லா இருக்கோம் அக்கா. நீயேன் டல்லடிக்கிற ?"

" ஏன் தான் வந்தோமோன்னு இருக்கு சம்யு . எங்க பாத்தாலும் வீட்டு ஞாபகமாவே இருக்கு."

"வீட்டு ஞாபகமா ..இல்லை வீட்டுக்காரர் ஞாபகமா ?" எனவும் அம்ருவின் இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை வந்து அமர்ந்தது.

"ரஞ்சி கிட்ட பேசியே பல நாள் ஆகுது தெரியுமா?" என்றாள் அலுப்பாய்.“அவன் என்னை அவாய்ட் பண்ரான்னு நல்லா தெரியுது.”

“ஏன் அக்கா அப்படி நினைக்கிற? அவருக்கும் வேலை அதிகமா இருக்கலாம்ல “

“அந்த ஆபிஸ்ல நடக்கறது எனக்கு தெரியாமல் போகுமா.. காயுவும் இவனும் ஒரே டீம்தானே! அவளால என்கிட்டே பேச முடியும்போது இவனுக்கு மட்டும் எப்படி வேலை வரும்?”

“உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை ? அதையாவது மறைக்காமல் சொல்லேன்”.

"மறைக்கறதுக்கு என்ன இருக்கு சம்யு? முன்னாடில்லாம் என் கிட்ட இருக்கற நல்லதை மட்டுமே பார்ப்பான்.. இப்போ நான் எது செஞ்சாலும் அவனுக்கு தப்பாவே தெரியுது. அன்னிக்கு ஏர்போர்ட்ல வச்சு யஷ்வந்த் என் கைய பிடிச்சிட்டான்னு கோவிச்சுக்கிறான். அவன் ஜஸ்ட் பிரெண்ட்லியா தான் பிடிச்சான்..ஆனால் இவன் ? உனக்கு குட் டச் பேட் டச் கூட தெரியாதான்னு என்னை என்னமா திட்டினான் தெரியுமா ?”

“அக்கா ஒருவேளை அவனை பத்தி உனக்கு தெரியாத விஷயம் ஏதாவது அத்தானுக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆண்கள் வட்டத்துக்குள்ள சில விஷயங்கள் இருக்கும். அதை வச்சு கூட அத்தான் சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. அவர்கிட்ட தெளிவா என்ன ஏதுன்னு கேட்டுக்காமல் சண்டை போடாதே அக்கா !”

“அம்மாவும் போன் பண்ணும்போதெல்லாம் மாப்பிள்ளைக்கிட்ட சண்டைபோடாதேன்னு அட்வைஸ் பன்றாங்க. அப்பா என்கிட்டே சரியா பேசறதே இல்லை. நீயாவது என் பக்கம் யோசிப்பேன்னு பார்த்தால் நீயும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்றே !போ சம்யு. நான் அவனை கண்டுக்கறதேயில்லைன்னு எல்லார்கிட்டயும் புலம்புறானாம். எனக்கு ஆன்சைட் வந்ததும் தலைக்கனம் அதிகமாயிடுச்சின்னு வேற சொல்லியிருக்கான்” .

“மத்தவங்க சொல்றதை வச்சு நீ முடிவெடுக்காத அக்கா. நேருக்கு நேர் கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதானே."

“அதுக்கு அவன் போன் பண்ணினால் தானே.. இல்லை நான் பண்ணும்போதாவது எடுத்தால் தானே..அவனுக்கு மத்தவங்க கூட சிரிச்சி பேச எல்லாம் நேரமிருக்கு. என் கூட பேசத்தான் அவனுக்கு முடியலை.”

புலம்பல் பக்கம் பக்கமாய் வந்தது.
தலைவேதனையாய் இருந்தது சம்யுவுக்கு.

காதலித்தால் இப்படித்தானா .. மண்டையோட்டுக்குள் இருக்கும் க்ரே மேட்டர் வெறும் களிமண்ணாக மாறிவிடுமோ ?!

“ஆனால் ஒன்னு சம்யு.. எனக்கு அவனை பார்க்காமல் பேசாமல் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமா தெரியுது. “

"என்னடா இது ? பழங்காலத்து பெண்கள் போல காதலனை காணாமல் பசலை கொண்டுவிட்டாயா அம்ரு?"

"கிண்டலா இருக்கா. இருடி.. உன்னை கலாய்க்க எனக்கொரு நேரம் வராதா ?"

"நமக்கு இந்த லவ்வெல்லாம் செட்டே ஆகாது அக்கா. சும்மா ஒருத்தன் பின்னாடியே நாள் பூரா சுத்திட்டு , ராத்திரியெல்லாம் அவனையே நெனச்சிட்டு, அவன் போன் பண்ணலேன்னா அழுதுட்டு, போன் பண்ணா சண்டை போட்டுட்டு ,டார்லிங் டியர்னு கொஞ்சிக்கிட்டு ..இதெல்லாம் பாத்தாலே கடுப்பாகுதுக்கா. இதில நான் லவ் வேற பண்ணனுமா ? போக்கா . சரி வேலை எப்படி இருக்கு ? அதை சொல்லு ?" என்று பேசிக் கொண்டே போக ..

ப்ரித்விக்கு தான் 'கடவுளே...எப்படி தான் இவளை கரெக்ட் பண்ண போறேனோ ? நல்ல நாள்லயே நாணயம் .. இதில இப்பதான் தனியா தள்ளிட்டு வந்திருக்கேன்..இந்த அண்ணி வேற இப்படி வெடி வைக்கிறாங்களே' என்று உள்ளூர புலம்பி தள்ளினான்.
தானும் சில நாட்கள் முன்பு வரை இதே வசனம் பேசியது நினைவு வர ..தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அவளுக்குள்ளும் ஏற்படும் என்று நம்பிக்கை தோன்றியது .

எப்படி அவளிடம் காதல் சொல்லி ..எப்படி சம்மதிக்க வைக்க போகிறோம் என்று உள்ளுக்குள் திகிலாக இருந்தாலும் , முகம் மட்டும் புத்தரை போல் ஒரு சாந்த புன்னகையை தாங்கியிருக்க.. பேசி முடித்து இவன் புறம் திரும்பிய சம்யு.. கையில் இருந்த கூகுள் மேப்பை பார்த்துவிட்டு "ஆமாம் என்ன இது இவ்வளவு ஸ்லோவா போறோம் ? அப்பவும் பத்து நிமிஷம் டைம் காட்டுச்சி. இப்பவும் அப்படியே காட்டுதே. ப்ரித்வி கார் ஓட்ட சொன்னா கட்ட வண்டி ஓட்டுற ?" எனவும் அதுவரை அவளை ஓரக்கண்ணால் ரசித்தபடி ..போகுமிடம் வந்துவிட்டால் இந்த தனிமை கிடைக்காதே என்று வருந்தியவனாய் மெல்ல காரை செலுத்திக் கொண்டிருந்தவன் இயல்பான விட்டேற்றித்தனம் தோன்ற ... கார் அவன் கையில் வேகமெடுத்தது.

போன வேலை இனிதே முடிய ... விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்து தேவையான விவரங்கள் சேகரித்து ..சாதகமான விஷயங்கள் தெரிந்த சந்தோஷத்தில் இவர்கள் கிளம்பும்போது கிட்டத்தட்ட மதியம் ஆகி இருந்தது
.
 
இந்த அம்ருக்கு இன்னும் யஷ்வந்த் நடவடிக்கை தப்பா தெரியலையே 🤔🧐🧐🧐 இவ எல்லாம் பட்டால் தான் திருந்துவா 🤧🤧🤧🤧🥺🥺

சம்மு நல்லா ப்ரித்வி நினைச்சு கனவு கண்டு கிட்டு எப்படி உருட்டுற 😱😱😱
 
Very nice 👍
 
Top