Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -15

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -15

மோகனுக்கு, மகளுக்கு கிடைத்த வாய்ப்பை குறித்து ஒரு புறம் சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும் இன்னொரு புறம் நிச்சயித்த திருமணம் குறித்த நேரத்தில் நடக்காவிட்டால் அபசகுனம் ஆகிவிடுமோ என்ற பயம்.

இவ்வளவு பெரிய இடம் .. அவர்களிடமும் பெரிதாக நிபந்தனைகள் இல்லை . இப்போது நாம் திருமணத்தை தள்ளி வையுங்கள் என்று எப்படி கூறுவது ..அதெல்லாம் சரிப்படாது என்று அடித்து சொல்லிவிட்டார்.
அம்ரிதாவோ எல்லாவற்றிலும் ஆதரவாக நிற்கும் தந்தை இப்படி சொல்லுவார் என்று நினைக்கவில்லை.

சோகமாக அமர்ந்திருந்தவளுக்கு ஆச்சரியப்படும் விதமாக தாயிடம் ஆதரவு கிடைத்தது. அவளுக்கு மட்டுமே ஆச்சரியம் ..தாயை குறித்து உள்ளும் புறமும் நன்கு அறிந்திருந்த சம்யுவிற்கு அப்படி இல்லை.

"இப்போ கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லி கேக்க போறோம் அவ்வளவு தானே . பொதுவாவே எல்லாரும் ஆறுமாசம் எட்டு மாசம்னு இடைவெளி விட்டு தானே வைக்கிறாங்க ? இதில தப்பென்ன மோஹி ? ரொம்ப முக்கியமான வாய்ப்பு அவளை தேடி வந்திருக்கு ..அதை என் தட்டி விடணும்? நமக்கும் கல்யாண ஏற்பாடுகள் பண்ண கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் "

"அவங்களுக்கு இருக்க பணபலத்துக்கு அவங்களே அவங்க கம்பெனில பல பேருக்கு இப்படி வாய்ப்புகளை உருவாக்கித் தருவாங்க ..அப்படி இருக்கும்போது இப்படி ஒரு காரணத்துக்காக கல்யாணத்தை தள்ளிப் போட சொல்லி கேட்டா என்ன நினைப்பாங்க தனு?"

"இதில அவங்க நினைக்க என்னங்க இருக்கு? இது அம்ருக்கு அவளோட படிப்புக்கும் திறமைக்கும் கெடச்ச வேலை ..அதுல அவ ஷைன் பண்ரா .அதுல மேல மேல போக வாய்ப்புகள் வருது .அதை விட்டுக் குடுக்க என்ன அவசியம் . எல்லா பெண்களுக்கும் என்னதான் கணவன் சம்பாதிச்சாலும் தான் கொஞ்சமாவது சம்பாதிச்சாதான் மரியாதை. நாமளே கல்யாணத்துக்கு அப்புறம் அவ வேலைக்கு போறதை பத்தி பேசியிருக்கணும் .இப்போ பேசிட வேண்டியதுதான்."

"அம்மா சொல்றது தான் பா கரெக்ட்" என்று சம்யுவும் ஆமோதிக்க ஒரு வழியாக சமாதானமானார் மோகன்.


நான்கு நாட்களாக ரஞ்சித் இவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
எப்போதும் வார இறுதியில் கடற்கரைக்கு செல்வார்கள்.. இன்றும் அதே இடத்தில இவள் காத்திருக்க அவன் கடைசி வரை வரவேயில்லை. தன்னை போலவே சோபையாய் தெரிந்த பிறை நிலவை பார்த்து மெளனமாக கண்ணீர் வடித்தபடி கடற்கரையின் ஈர மணலில் தனியாக அமர்ந்திருந்தாள் அம்ரிதா.

அவனது உதாசீனத்தை ஒரு நான்கு நாட்கள் கூட தாங்க முடியவில்லையே!

எப்படி இன்னும் மூன்று மாதங்கள் அவனை பிரிந்து இருப்பது?
அவன் சரியென்று சொல்லாமல் ஊரை விட்டு கிளம்ப அவளுக்கு மனமேயில்லை.
ன் மனநிலையை ரஞ்சி புரிந்துகொள்ளவே மாட்டானா என்று ஆற்றாமையாக இருந்தது.


கொடைக்கானலில் அந்த புகழ்பெற்ற ரிசார்ட்டின் அறையில் அமர்ந்திருந்தனர் , ரஞ்சித் ,சித்து மற்றும் ஜெரி !


"டேய் முட்டாள் மாதிரி பேசாத .. இதென்னடா அவள் அங்கேயே மாற்றலாகி போகபோறாளா ? இல்லையே ..மூணே மாசம் ப்ராஜக்ட் ! அதுக்கு ஏண்டா இவ்வளவு புலம்பல் ? " ஏற்றிய போதை எல்லாம் முற்றிலும் இறங்கியிருக்க ... ரஞ்சித்தின் புலம்பலை தாள மாட்டாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் சித்து.

"இல்லடா .. எல்லாரும் என்ன ரொம்ப கீழா பாக்கிற மாதிரி இருக்குடா .நான் அவளுக்கு பொருத்தமில்லையோ? என்னை விட இன்னும் எல்லாத்திலயும் சிறந்த ஒருத்தன அவ தேர்ந்தெடுத்திருக்கலாமோ ? இப்படிலாம் ஏதேதோ தோணுதுடா.”

"என்னடா பேசற ? நீங்க ஒன்னும் அரேஞ்டு மேரேஜ் இல்லை ..நீ சொல்ற மாதிரி பொருத்தமெல்லாம் பாக்க ...உனக்கு அவளை பிடிச்சிருக்கு . அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு. இதை தவிர எல்லாமே ரெண்டாம் பட்சம் தான். "

"அவளுக்கு நீ தகுதியானவனா அப்படின்னு அவ தான் முடிவு பண்ணனும் . அப்படி நம்பறதால தான் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறா . இப்போ நீ இப்படி யோசிக்கறதே கூட அவ நம்பிக்கையை குலைக்கிற மாதிரிதான்." நண்பனை கண்டணத்தோடு பார்த்தான் சித்து. நடக்கிற உரையாடல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் ஜெர்ரி. அவனும் இவர்களோடு கல்லூரியில் ஒன்றாக பயின்றவன் தான். இப்போது வேறு இடத்தில் வேலை பார்க்கிறான்.

"இல்லடா ..உனக்கு புரியல . ஆபிஸ்ல எல்லாருமே என்னையும் அவளையும் கம்பேர் பண்ணி தான் பாக்கிறாங்க . அதில நான் ஒரு படி அவளோட தாழ்ந்து தான் இருக்கேன்." என்று வருந்தவும் ஜெர்ரி சொன்னான்.

"இப்போ தான் நீ உண்மையா தாழ்ந்து போற ரஞ்சித். "

"தகுதின்னா என்ன ? படிப்பு , அழகு , அறிவு, திறமைகள் இதெல்லாம் தகுதிதான் ..ஆனால் இதெல்லாம் பெர்சனல் லைஃப்க்கான தகுதிகள் இல்லை. ஒருத்தர் மேல ஒருத்தர் காட்டற அன்பும் புரிதலும் ஒருத்தர ஒருத்தர் விட்டு குடுக்காம இருக்கறதும் தான் ஒரு நல்ல திருமண வாழ்வுக்கான தகுதிகள். அதனாலே தான் நமக்கு பாத்தவுடனே பொருத்தமில்லாத மாதிரி தெரியற எத்தனையோ ஜோடிகள் வாழ்க்கைல ரொம்ப வெற்றிகரமா இருக்காங்க "

"நீ பெரிய குடும்பத்தில இருந்து வந்திருக்கே. பணம் அந்தஸ்து எல்லாத்திலயும் எங்களை அம்ரிதாவை விட பல மடங்கு அதிகம். அனால் ஒரு நாளும் நீ அதை காமிச்சிக்கிட்டதில்லை. எவ்வளவு நல்ல நண்பனா இருக்கே. அதே மாதிரி நல்ல காதலனாவும் கணவனாவும் இருப்பேன்னு எனக்கு தெரியும்டா. நீயே உன்னை தாழ்த்திக்காதே . அம்ரிதாவும் அப்படி உன்னை நெனைக்க மாட்டா. அவளும் திறமையானவள் தான். உன்னை விட திறமை அதிகமா இருக்கலாம். அதில தப்பில்லையே . அவள் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பார்த்து நீ சந்தோஷம் தானே படனும். அவளோட முன்னேற்றத்தில் துணையா இருக்க வேண்டிய நீயே வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கறது அவளுக்கு எவ்வளவு மனவருத்தம் கொடுக்கும்னு யோசிச்சு பாரு." என்றான்.

சித்துவும் அதை ஆமோதித்தான். "ஆமாண்டா .. நாலு பேர் பேசறதை பத்தி யோசிக்கிற சாதாரண கணவன் நீ இல்லடா. இதே வேற வேற ஆபிஸ்ல இருந்தா நீ இப்படி யோசிச்சிருப்பியா. அதை விடு உன்னோட குடும்ப பின்னணி தெரிய வரும்போது இதே நாலு பேர் உன்னை உயர்த்தியும் அவளை தாழ்த்தியும் பேசுவாங்க . இவளுக்கு எதுக்கு வேலை ஆன்சைட் எல்லாம் ? போய் இந்த பணக்கார புருஷனோட குடும்பம் நடத்த வேண்டியது தானேன்னு நினைப்பாங்க. அவங்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்கு ரஞ்சித். நீ அவ கணவன். அவளோட ஒவ்வொரு முன்னேற்றத்திலயும் உன்னோட பங்கு இருக்கணும்"
நண்பர்களின் பேச்சு ரஞ்சித்தினுள் தெளிவை தர தொடங்க ..அவன் முகம் கண்டே அதை புரிந்து கொண்டவர்கள் "சரிடா ஏறுனதெல்லாம் இறங்கிடுச்சி! நீ உன் ஆளை பத்தி கனவு கண்டுட்டே படு. நாங்க எங்க வேலையை கவனிக்கிறோம் " எனவும் .."சரிடா. அளவோட அடிங்கடா " என்றான் ரஞ்சித் கவலையாய்.

"டேய்..லவ் பண்றவன கூட கூட்டிகிட்டு வந்தா எந்த சரக்கும் பத்தாதுடா " என்று நொடித்துக் கொண்டான் ஜெர்ரி.



கோக்கர்ஸ் வாக் பூங்கா .. சுற்றிலும் அழகிய பூக்களும் மரங்களும் அதன் நறுமணமும் சூழ்ந்திருக்க சீசன் நேரம் இல்லாததால் அதிக கூட்டமில்லை.. ஆனாலும் பல தேனிலவு ஜோடிகள் தங்கள் காதலை தடையின்றி பகிர்ந்து கொண்டிருந்தனர்.


சித்துவும் ஜெரியும் நன்கு சரக்கடித்து மட்டையாகிவிட எப்போதாவது மட்டுமே அருந்தும் பழக்கமுள்ளவன் ரஞ்சித் .. இப்போது அதுவும் ரசிக்கவில்லை,, அமைதியாக படுத்துவிட்டான்.

அதிகாலையில் பனியையும் பொருட்படுத்தாமல் நடக்க தொடங்கியவன் அருகில் இருந்த அந்த புகழ் பெற்ற பூங்காவினுள் நுழைய ..

அவனுக்கு எங்கு நோக்கினும் அவனது ரித்து தான் தெரிந்தாள்.
சாலையோர பூக்களில் அவள் முகம் தான் .. காற்றின் ஓசையிலும் அவள் குரல் தான்... மெல்ல தொட்டு செல்லும் மேகக் கூட்டங்களில் அவளது தீண்டல் தான் ..எங்கெங்கு காணினும் ரித்து தான்.

அவளின்றி ஓரணுவும் அசையாது என்பதை இந்த அமைதியும் தனிமையும் அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தது.

ரித்துவை விட அவளது காதலை விட எதுவும் பெரிதில்லை என்று தோன்ற .. மூன்று மாதம் ஆன்சைட் தானே என்றே தோன்றி விட்டது.. அதுவும் அவள் எவ்வளவு அறிவும் திறமையும் நிறைந்த பெண் ! முன்னேறும் வேட்கை கொண்டவள்... படிப்பில் முதல்.. பள்ளியில் கல்லூரியில் எல்லாமே ! வேலையில் முன்னேற்றம் ..பெரிய பதவி என்பதெல்லாம் அவளது லட்சியம் ..எல்லாமே அவனுக்கு நன்றாக தெரிந்த விஷயங்கள் தான்..இப்போது சட்டென்று அவளை பிரிந்து மூன்று மாதங்கள் ,அதுவும் திருமணம் வேறு தள்ளிப் போகும் என்ற நிலையில் கோபம் தலைக்கேறி விட்டது. அவளோடு நான்கு நாட்கள் பேசாமலும் இருந்து விட்டான். இப்போது தனியே இருந்து யோசிக்கும் போது இது எதுவுமே முக்கியமில்லை ..அவளது சந்தோஷம் தான் முக்கியம் என்று தோன்றியது. வேறு காலமாக இருந்தால் இவன் தானே அவளை விட குதூகலித்திருப்பான்?

மெல்ல மெல்ல அவள் மீதான கோபம் காணாமல் போய்விட ..இரண்டு நாட்களாக அணைத்து வைத்திருந்த அலைபேசியை ஆன் செய்து " சாரி டியர் .. என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது. உன் முன்னேற்றத்திற்கு நான் துணையிருப்பேன் .இன்னும் மூன்று மாதங்கள் காதலர்களாக இருப்பதில் எனக்கு சந்தோஷம் தான். ஆல் தி பெஸ்ட் " என்று வாட்டசாப்பில் செய்தி அனுப்ப .. அதே நேரம் அம்ரிதாவிடமிருந்து வாய்ஸ் நோட் வந்து விழ திறந்து பார்த்தான்.

" ப்ளீஸ் ரஞ்சி ..டாக் டு மீ .. உன்னை விட எனக்கு எதுவுமே முக்கியமில்லை ..கல்யாணத்திற்கு பிறகு என் முதன்மையான கவனிப்பு உனக்கும் நம் குடும்பத்துக்கும் தான். அதனால் தான் இப்போதே வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. உனக்கே தெரியும் திஸ் இஸ் நாட் அபவ்ட் மணி ..இட்ஸ் அபவ்ட் ரெகக்னிஷன் ..ஆனால் உனக்கு இதில் சந்தோஷமில்லை என்றால் எனக்கும் இல்லை . டாக் டு மீ ப்ளீஸ் ..லவ் யு " என்ற வாய்ஸ் நோட்டும் அதன் பின்னர் சோகம் ததும்பும் அவளது குரலில் ஒலித்த 'கண்ணாமூச்சி ஏனடா ?' பாடலும் அவளது துயரத்தை முழுமையாக சொல்ல ..அதற்குமேல் யோசிக்க எதுவுமே இருக்கவில்லை ரஞ்சித்திற்கு.


அம்ருவை விடவே முடியாது என்று தெளிவானவுடன் அவளை உடனே பார்க்கும் ஆவல் மேலோங்க ஹோட்டல் உள் நுழைந்து அறையை நோக்கி நடக்க துவங்கியவனால் தன கண்ணை நம்பவே முடியவில்லை!

அவ்வளவு நேரம் அருவமாய் நின்று அவனை கொல்லாமல் கொன்றவள் முழு உருவமாய் கண் முன் நிற்க ..தாள முடியாத உணர்வு அலை வந்து இருவரையும் தாக்க, சிலைபோல் ஒரு கணம் சமைந்தவர்கள் மறுகணம் இறுக்கமாக கட்டிக் கொள்ள நடுவில் சிக்கிய

காற்று கூட கதறி துடிக்க ..தன்னவளை கையில் ஏந்தி நடக்க தொடங்கினான் ரஞ்சித் !

அறைக்குள் நுழைந்தவன் அவளை கண்ணாடி முன் நிறுத்தி பின்புறமிருந்து கட்டிக் கொண்டான் .

கண்ணாடியில் இருவரது பிம்பமும், இதைவிட பொருத்தமான ஜோடி உண்டா என்று கேட்க .. லேசாக பார்வையை திருப்பியவனின் விழிகளில் அந்த பிறை மச்சம் விழஅதற்குமேல் எதற்கும் கட்டுப்படவில்லை அவன் மனம் .ஒரு அழுத்தமான முத்தம் அந்த சிறு மச்சத்தின் மேல் .. அதன் தாக்கம் அம்ருவை எங்கோ கொண்டு செல்ல .. மெல்ல அவளை தன் நெஞ்சின் மீது கிடத்திக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான் ரஞ்சித்

இதழ்கள் ஒன்றை ஒன்று தேடிக் கொள்ள.. இமைகளும் ஒன்றை ஒன்று பிரியாமல் இறுக மூடிக் கொண்டன ..

ஒரு நீண்ட நெடிய இதழ் முத்தம் .. இதழ்களுக்குள் இடைவெளி கிடைத்தபோதெல்லாம் ரித்து ரித்து என்று ரஞ்சித்தின் இதழ்களோ ஜெபிக்க பாவையவளின் பூவிதழ்கள் வார்த்தைகள் மறந்து துடித்துக் கொண்டிருந்தன. அவ்வளவு நாட்கள் கட்டுக்குள் இருந்த ஆண்மகனின் துடிக்கும் கரங்கள் தங்கள் தேடலை துவங்க .. அனுமதியற்ற ஒரு பயணம் பாவையின் உடலில் !


அனுமதி தேவையற்ற பயணமும் கூட .. கரங்களின் அத்துமீறலை இதழ்களும் பின்தொடர ..சில நிமிடங்களுக்கு பின் பெண்ணவளின் மனம் முற்றிலும் சரணாகதி ஆகியிருக்க .. எவ்வளவு நேரமோ எவ்வளவு காலமோ .. கருந்துளைக்குள் நுழைந்ததுபோல் இருவரும் காலநேரம் மறந்திருக்க அதை கலைப்பதுபோல் அழைப்பு மணி ஒலித்தது .


சூடான காபியை மெல்ல அருந்தியபடி கூச்சம் மேலிட அமர்ந்திருந்தாள் அம்ரிதா .
'வட போச்சே' என்பதுபோல் ஏமாற்றம் பொங்க அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

'என்னடா நடக்குது ?' என்று பார்வையாலேயே கேட்டபடி அமர்ந்திருந்தனர் சித்துவும் ஜெரியும்.

"சரி ஒரு வழியா சமாதானமாகிட்டீங்க போல " என்றான் சித்து. அவன் காதோரமாக ஜெர்ரி "இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அம்மாப்பாவே ஆகியிருப்பாங்க " என்று மெல்ல சொல்ல, பொங்கிய சிரிப்பை அடக்கியபடி இருவரையும் ஏறிட்டான் சித்து.

"இனிமே தேவையில்லாமல் சண்டை எல்லாம் போடாதீங்கடா .. எங்களால தாங்க முடியல. நேத்து ராத்திரி இவன் புலம்பலை தாங்கமுடியாம பாட்டில் பாட்டிலா தண்ணிய குடிச்சிருக்கான் இந்த பையன் ஜெர்ரி " என்று கூற " எந்த தண்ணியடா சொல்றே? " என்று இடையிட்டான் ஜெர்ரி .

"ரொம்ப முக்கியம்டா உனக்கு இப்போ.. "என்று அவனை அடக்கியவன் மேலும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க ..

"டேய் .. போதும்டா பசியெடுக்குது.. “ என்றான் ரஞ்சித் .
"சரி வாங்க சாப்பிட போகலாம்" என்றபடி சித்து எழ ..

“ நாங்க இங்கேயே சாப்பிட்டுக்கறோம் .நீங்க ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடுங்க .. அப்பறம் இன்னிக்கே ஊருக்கு கிளம்பணுன்னு சொல்லிக்கிட்டிருந்தியே சித்து .. கேப் புக் பண்ணிட்டியா ?" அசராமல் சொன்னான் ரஞ்சித்.

"அடப்பாவி எப்படி டா இப்படி நிமிசத்தில மாறுற? இதுக்குதான்டா லவ் பண்றவங்கள நம்பவே கூடாதுன்னு சொல்ராங்க போல " என்று ஜெரி புலம்ப ...

"டேய் மகனே ! நாங்க போய் சாப்பிட்டுட்டு வருவோம்...அத்தோட நீயும் கிளம்புற... உன்னை அனுப்பி வச்சிட்டு தான் நான் கேப்ல ஏறுவேன்" என்று ஸ்ட்ரிக்ட் ஆபீசராய் சொல்லிவிட .. சிரித்து கொண்டே நண்பனை அணைத்துக் கொண்டான் ரஞ்சித்.

பின் இருவரும் மட்டும் இவனது காரில் .. கொஞ்சலும் கெஞ்சலும் மிஞ்சலுமாய் ஒரு பயணம் சென்னை நோக்கி!
 
Top