Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -12

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member

அத்தியாயம்- 12


நிச்சயம் நெருங்குவதற்குள் அது இது என்று சத்யபாமா ஒவ்வொன்றாக அடுக்கி விட்டார்.

புடவை மட்டுமே அவர்கள் செலவில் எடுத்திருக்க ... மற்றது எல்லாவற்றிற்கும் மோகன் தான் செய்தார்..சம்பந்தியிடம் எப்படி கேட்பது என்று புரியவில்லை. ஏதாவது பேச ஆரம்பித்தாலே ஒரு நய்யாண்டி பார்வை தான் சத்யபாமாவிடம்.

அம்ரு தருகிறேன் என்று சொன்னாலும் பெற்றோர் இருவருக்கும் அவளிடம் கேட்க மனமில்லை..

தனுஜா ஆரம்பத்தில் சொன்னதற்கான அர்த்தம் மோகனுக்கு இப்போது விளங்கியது..வழக்கம் போல் மனைவியின் தொலைநோக்கு பார்வையை வியந்து கொண்டார்.

நிச்சயத்திற்கு இரண்டு பக்கம் இருந்தும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருக்க அந்த பெரிய அரங்கு காலியாக இருப்பது போலவே தென்பட்டது.

விழாவிற்கு வந்த ஷபானாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் சம்யு.. "பாருடி ..பாதி இருக்கைகள் காலியா தான் இருக்கு . யாருக்காக இவ்வளவு பெரிய அரங்கை புக் பண்ண சொன்னாங்கன்னே தெரியல .. எங்கப்பாவுக்கு தேவையில்லாத செலவு " என்று புகைந்தவள் எதிரில் ப்ரித்வி வர "இதோ இவன் ஐடியாவா தான் இருக்கும்" என்றாள்.

அவனருகே ஒரு இளம்பெண் நடந்து வர சம்யுவின் விழிகள் அவளையே பார்த்தன. பாந்தமாக இருந்த அவளது அழகும், பளிச்சென்ற தோற்றமும் அவள் விழிகளை ஈர்த்துக் கொண்டிருக்க.. ப்ரித்வியுடனான அவளது நெருக்கம் தான் முதலில் கண்ணில் பட்டது. அது ஏனோ இவளிடம் ஒரு பொறாமையை தூண்டியது.
"அவனை ஏண்டி இழுத்து விடற ? " என்றாள் ஷபானா

"வேணும்னே அவங்கம்மா கிட்ட சொல்லி இதெல்லாம் செஞ்சிருப்பான்."

"அவன் அப்படிலாம் இல்லடி .உனக்கு அவனை கண்டாலே ஆகல ..அதுக்காக ஒரேயடியா அவனை குறை சொல்லதடி . உனக்கு வேணும்னா அவன் எதிரியா இருக்கலாம். ஆனா எனக்கு அவனும் நண்பன்தான்" என்று கூற ..

இவர்களை கண்டதும் அருகே வந்த ப்ரித்வி ஷபானாவை நோக்கி புன்னகைத்தான் "வா ஷபானா “ என்று வரவேற்றவன் "ஷபானா ..ஷி ஐஸ் உமையாள். என்னோட க்ளோஸ் ஃபிரென்ட் அண்ட் கசின் “என்று அறிமுகம் செய்தவன் இவர்களையும் அவளுக்கு அறிமுகம் செய்வித்தான்.

“ என்ன ஷபானா ? சில்வண்டு ஏதோ சத்தம் போட்டுட்டு இருக்கு ?" என்றான் நக்கலாய் .

"அடடா வந்துட்டாரா நாட்டாமை .. அவரையே கேப்போம் ..என்னமோ ஊரையே கூட்டி நிச்சயம் பண்ற மாதிரி எதுக்கு இவ்வளவு பெரிய அரங்கம் ? ஒருவேளை நல்லபடியா நிச்சயம் முடிஞ்சா எல்லாரும் இங்கேயே உருண்டு அங்கபிரதட்சணம் பண்றோம்னு வேண்டிக்கிட்டிங்களோ? " என்று பதில் கொடுத்தாள்.

ப்ரித்வியை பார்த்துவிட்டாலே இவள் பொறுமை தான் பறந்து விடுமே!

அவள் சொல்வது உண்மை தான் என்று அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவனும் தந்தையும் சிறிய ஹாலே போதும் என்று சொல்லியும் சத்யா வெகு பிடிவாதமாக இருக்க .. அன்னையை விட்டுக் கொடுக்க முடியாமல் அதுவும் சம்யு சொல்வது உண்மை என்று ஒத்துக் கொள்ள பிடிக்காமல் "நாங்க உருளுவோம் இல்லை இங்கேயே பாய் விரிச்சி படுப்போம் .. உனக்கென்ன ? டேய் ஜஸ்டின் அந்த கொசு பேட்டை எடுடா .. கொசு தொல்லை தாங்கலடா"

"ஆமாமா ..காண்டாமிருகத்துக்கெல்லாம் நாங்க கொசு மாதிரி தான் தெரிவோம் ..ஜஸ்டினு .. கொண்டு போய் ஜு ல தள்ளு இந்த வனவிலங்கை " என்று விடாமல் கலாய்க்க .. "சம்யு " என்ற தாயின் குரலுக்கு அங்கிருந்து நகர்ந்தாள் சம்யு .

சம்யு நிச்சயத்துக்கான புடவையை அலங்காரம் செய்ய வந்த பெண்ணிற்கு காட்டுவதற்காக ..மணமகன் வீட்டார் இருந்த அறைக்கு செல்ல ..கதவோ சற்று திறந்து இருந்தது.

யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணியோ அல்லது யாரும் கேட்டால் தான் என்ன என்றெண்ணியோ பேசியவர்கள் ரகசியமாக கூட பேசவில்லை . குரல் வாசலை தாண்டி கேட்க.. பேசியது சத்யாதான்.

"என்ன சத்யா ? இப்படி பஞ்சபராரி குடும்பத்தில போய் பொண்ணெடுத்திருக்க ?" ஒரு நாரத பெண்மணி கொளுத்திப் போட ..சுற்றியிருந்தோர் அதற்கு ஜால்றா தட்ட.."ஆமாமாம். உன் தகுதிக்கு பெரிய பெரிய பிசினஸ்மேன் கிட்டலாம் சம்மந்தம் வந்திருக்குமே ! ஏன் ? நம்ம ஷிவானி வீட்டுல கூட கேட்டாங்களாமே " என்று ஏற்றிவிட..

பதிலுக்கு சத்யபாமாவின் பொருமும் குரல் கேட்டது " என் பொண்ணோட ஒன்னு விட்ட நாத்தனார் கூட இருக்கா . ஆனால் என் பையன் இவள் தான் வேணும்னு ஒத்த கால்ல இல்லை நிக்கிறான் . என் பேச்சை தட்டவே மாட்டான். னால் என்னிக்கு இவளை பார்த்தானோ அன்னையிலருந்து என் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கிறதில்லை. அப்படி அவனை மயக்கி வச்சிருக்கா. அழகை ஆண்டவன் குறைச்சலில்லாமல் குடுத்திருக்கானே. அதை வஞ்சனையில்லாமல் உபயோகப்படுத்தியிருப்பா “ எனவும் நக்கல் சிரிப்பில் அறை குலுங்கியது .

“இதில என் புருஷனும் ப்ரித்வியும் வேற இவனுக்கு சப்போர்ட் ."

"அதுக்காக இப்படி விட்டு குடுத்திட்டியே. சின்ன பையன் ரஞ்சித் அவனுக்கு என்ன தெரியும். நாளை பின்ன அவனுக்கு மாமனார் வீட்டு சீரெல்லாம் நிறைய வந்தால் தானே மரியாதை?"

"விடு இந்து .. இப்போ என்ன நிச்சயம்தானே நடக்குது. இப்பவே அவங்களை எப்படியெல்லாம் கதற விடறேன்னு பாரு. கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கில்ல.. அதுக்குள்ள என் பையன் மனச மாத்தறது எப்படின்னு எனக்கு தெரியும். நான் பாக்கிற பொண்ணைதான் அவன் கல்யாணம் பண்ணுவான்" என்று உறுதியாக சொல்ல .. மனதிற்குள் சுருக்கென்றிருந்தது சம்யுவிற்கு.

மாப்பிள்ளை வீட்டினர் எடுத்து வந்திருந்த பச்சை நிற பட்டில் அம்ரு தேவதையாய் மிளிர .. அவளுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல என்பதுபோல் ஒரு இளம் பச்சை நிற ஷெர்வானியில் நின்றிருந்தான் ரஞ்சித்.

இருவரின் மகிழ்ச்சி பூசிய முகங்களும், சந்தோச புன்னகையும் மற்றதை மறக்க செய்ய அனைவரும் நிச்சய நிகழ்வுகளில் ஈடுபடத் தொடங்கினர்.
இரு வீட்டாரும் தட்டு மாற்றி கொள்ள மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள ..தன்னவளுக்காக ஒரு அழகிய வைர மோதிரத்தை வாங்கியிருந்தான் ரஞ்சித்.

அதன் பளபளப்பு கண்ணை பறிக்க சத்யா ஒரு ஆரம் ஒன்றை அணிவிக்க மோகனை கையிலேயே பிடிக்க முடியவில்லை. இதில் தேவையற்ற செலவுகளும் ஆடம்பரங்களும் பெரிதாக தெரியவில்லை. என் மகளுக்கு அவள் விரும்பிய நல்வாழ்வு அமைந்திருக்கின்றது என்றே மனம் நினைத்தது.. மற்றவை அவர் கருத்தை எட்டவில்லை.பெண் மீதான கண்மூடித்தனமான அன்பு அதை எட்டவும் விடவில்லை.

ஐந்து நட்சத்திர விடுதி ஆகையால் யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் இல்லை . அதனால் அவ்வளவு களேபரத்திலும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர் சம்யுவும் ப்ரித்வியும் ..

அதனால் சம்யுக்தா முகம் மட்டும் சரியில்லை என்பது யார் கவனித்தார்களோ... ப்ரித்வி நன்கு கவனித்தான்..இவ்வளவு நேரம் நன்றாக தானே இருந்தாள்?
வாய்க்கு வாய் தன்னோடு சண்டையிட்டாள்.. இப்போது வெகுவாக அமைதியாகிவிட்டாளே! என்று யோசனையாக இருந்தது.

மோகனின் தங்கை கணவர் ஒருவர் வந்திருந்தார். சம்யுக்தாவை எப்போதும் 'உன் ப்ரித்விராஜன் எங்கே ?' என்று கேலி செய்வதே அவருக்கு பொழுதுபோக்கு. அத்தையின் முகத்திற்காக வாயை இழுத்து பிடித்து சிரித்தாற்போல் வைத்தபடி நகர்ந்துவிடுவாள் சம்யுக்தா.

இன்றும் அவர் அதே ராமாயணத்தை படிக்க " என்னம்மா சம்யுக்தா? உங்க அக்காவுக்கு நிச்சயமாயாச்சு. அடுத்து உன்னோட ப்ரித்விராஜன் எங்கேயிருந்து வர போறான்?" என்று கூறி அவுட்டு சிரிப்பொன்றை சிரித்துவைக்க ..சுற்றியிருந்த உறவினர்களும் சிரித்துவைக்க சம்யுவுக்கோ கடுப்பாக இருந்தது.

சரியாக அந்த நேரம் யாரோ 'டேய் ப்ரித்வி 'என்று அழைக்க அனைவருமே 'என்னடா 'என்று கேட்ட ப்ரித்வியை தான் பார்த்தனர்.

" தம்பி இங்கே வாங்க " என்று அவனை அழைத்த இவளது மாமா "உங்க பேரென்ன ?" என்று கேட்க .."மாமா ..கொஞ்சம் சும்மா இருங்க .. அவனை ஏன் இப்போ கூப்புடுறீங்க ?" என்று அடக்க முயல ..அவரா கேட்பார்?

மோகனுக்கு தங்கை கணவர் அல்லவா ? இன்னமும் மாப்பிள்ளை முறுக்கோடு தான் திரிவார்.

"நீ அமைதியா இரு சம்யுக்தா " என்று அவளை அடக்கியவர். "தம்பி பேரென்ன ?" என்று மறுபடியும் அவனை பார்த்து கேட்க ..மரியாதை நிமித்தம் "ப்ரித்வி..பிரித்விராஜ் கிருஷ்ணன் " என்று கூறினான்.

அவரது தோரணையும் அருகே சம்யுக்தா வேண்டாவெறுப்பாக நிற்பதும் அவனுக்கு சுவாரஸ்யமேற்ற ..போதாதற்கு .."பாத்தியா ஆனந்தி ?" என்று தன் மனையாளை அழைத்தவர் .."நான் சொல்லலை ... இந்த சம்யுக்தாவுக்கேத்த ப்ரித்விராஜன் ஒரு நாள் வந்து தூக்கிட்டு போவான்னு" என்று சிரிக்க ..

அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது சம்யுவுக்கு.

இந்த மாமாவுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் என்பதே இல்லையே .. இவன் ஏற்கனவே என்னை பற்றி ரொம்ப அலட்சியமாக எண்ணுவான். இப்போதோ கேட்கவே வேண்டாம். புழுவை பார்ப்பது போல் பார்ப்பானே!

போதாக்குறைக்கு இவன் தாய் வேறு அக்கா இவர் மகனை மயக்கி விட்டதாக பேசுகிறார்.
அக்காவின் நிச்சய விழாவாக மட்டும் இல்லாமல் போனால் இந்த மாமாவின் மனடையை பிளந்திருப்பாள். அவ்வளவு கோபம் பொங்கியது அவளுக்குள்.

ப்ரித்வி அவளது சங்கடத்தை ரசிக்க .. ஒரு கேலிச்சிரிப்பு அவன் இதழ்களில்!
அதை கண்டதும் அவளது விழிகள் சட்டென்று கலங்கிவிட்டன. வேறு சந்தர்ப்பமாயிருந்தால் மாமாவுக்கு நல்ல பதிலடி கொடுத்திருப்பாள். இப்ப்போது அமைதி காக்க வேண்டிய நிலை.

அவளது இயலாமை விழிகளில் நீர் கோர்க்க செய்தது. அதை மறைக்க இமைகளை படபடவென்று அவள் சிமிட்ட ..ப்ரித்வியின் கேலி கிண்டல் எல்லாம் எங்கோ சென்று மறைந்தது.

எப்போதும் அவளை கோபமும் கர்வமுமாய் பார்த்தவன் ..இப்போது சங்கடமும் இயலாமையுமாய் பார்க்க ..அவனுக்கே அது ஒப்பவில்லை.

அவளது முகத்தை பார்த்த அவளது அத்தை தன் கணவரின் அதிகப்ரசங்கித்தனம் அறிந்தவராய் "நீங்க தப்பா நினைக்காதீங்க தம்பி.. இவர் இப்படித்தான் காமெடி பண்றதா நினைச்சுட்டு ட்ராஜெடி பண்ணி வைப்பார் " என்று அவர் காலை வாரி விட..

"பரவாயில்லை ஆண்ட்டி .. நான் தப்பா நினைக்கலை . சம்யுக்தா வரலாற்றில் இருக்கும் ஒரு ஒப்பற்ற பெண்..கண்ணால பாக்காமலேயே ஒருத்தரோட குணாதிசயங்களை, வீரத்தை காதால் கேட்டு அவர் மேல காதல் கொண்டு அதுக்காக தன் தந்தைக்கிட்ட போராடினவ. அந்த காலத்தில பெண்களுக்கான எந்த உரிமையும் இல்லாத காலகட்டத்திலே .. இப்போ இருக்க கூடிய தகவல் தொடர்புகள் இல்லாத நிலையில் எந்த நம்பிக்கையில் தனக்காக அவன் வருவான்னு ஒரு பொண்ணால காத்திருக்க முடியும்? அப்படியே வருவாங்கிற நம்பிக்கையில கையில மாலையோட அத்தனை ராஜகுமாரர்களுக்கிடையில சுயம்வரத்துக்காக வந்து நின்னான்னா ..அவள் மனசுல காதல் எவ்வளவு தூரம் நம்பிக்கையை கொடுத்திருக்கும். அந்த நம்பிக்கைக்காக அவளோட போராட்டம்.. அது வெற்றி அடைஞ்சது.. பெரிய விஷயம்! ப்ரித்விராஜனும் சும்மா இல்லை..அன்னிக்கு அவன் அவளை வந்து தன் குதிரையில் தூக்கி போகலேன்னா ..கட்டாயம் அந்த ராஜ்ஜியத்தின் மேல் போர் தொடுத்தாவது அவளை அழைத்து போயிருப்பான். அவன் செஞ்ச செயல் ஒரு போரை தவிர்க்க தான்." என்று விலாவரியாக அவன் பேச சம்யுவின் முகம் சற்றே தெளிந்தது.

அவள் தேறி கொண்டாள் என்று பார்த்தவன் "நீங்க ஒன்னும் இந்த சம்யுக்தாவையும் லேசா நினைக்காதீங்க ...அவளை போய் யாராவது குதிரையில் தூக்கிட்டு போகமுடியுமா ? குதிரை தாங்குமா ?" என்று சிரிக்காமல் கேட்க .. இவளது உறவு கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்க.. நிலைமை சட்டென இலகுவானது.

மீண்டும் இவள் அவனை முறைக்க ...இவள் அருகே வந்தவன் லேசாக இவளை பார்த்து கண்சிமிட்ட ..

வாயை பிளந்து நின்ற சம்யுவின் தலையில் லேசாக தட்டியவன் தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.

ஒரு மாதம் கழித்து பொருத்தமான ஒரு முகூர்த்தம் இருக்க அந்த தேதியிலேயே திருமணம் என்று முடிவெடுத்தனர்.

ரஞ்சித்திற்கு அப்பாடா என்றிருந்தது.
 
சத்யா 🥶🥶🥶 உனக்கு பிடிக்கலன்னா உன் மகனை அடக்கி வைத்த வேண்டிய தான 😡 😡 😡 😡

இந்த அம்ரிக்கு அவங்க செய்றது கொஞ்சம் கூட தப்பா தெரியல 🧐🧐🧐🧐

ப்ரித்வி சம்யு நடுவுல இந்த கல்யாணம் முடியுறதுகுள்ள நல்ல புரிதல் வந்திடும் போல 😉😃😄😆😆😉


மாமா 🤦🤦🤦🤦 இப்படி லூசுதனமா பேசுற சொந்தம் ஒன்னு எல்லா விஷேஷத்திலும் இருக்கும் 😂😂😂😂😂
 
Top