Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

RERUN of KUK - 01

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
Hi friends...
புதிய தளத்தில் பதிவிடப்படும் என் முதல் கதை!!!!
நிறைய விமர்சனங்களும் பாராட்டுகளும் எனக்கு பெற்றுக்கொடுத்த "KUK", இப்போது மறுபதிவு செய்வதில் அலாதி மகிழ்ச்சி!!!
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்கா!!!

18


*1*
"அங்கிள் ப்ளீஸ்......! It's enough,, leave me alone for some days for heaven sake...... இன்னும் கொஞ்சநாள் அங்க இருந்தாலும், எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்.... 25 வருஷமா தனியாதான் இருந்துருக்கேன்... So i know how to handle myself,, please don't try to track me,,, என்னை தேடி வரதோ, இல்ல நான் என்ன செஞ்சுட்டு இருக்கேனு கண்கானிக்குறதோ வேணாம்.... if u do that, i would go somewhere else,, நான் சொல்லுறத செய்வேணு உங்களுக்கே தெரியும்... எனக்கு எப்போ தோணுதோ, அப்போதான் நான் வருவேன்.... அதுவரைக்கும் நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க... I'm gonna switch off my mobile,, take care uncle,, bye... "

எதிர்முனையில் இருப்பவர் பேச வாய்ப்பே அளிக்காமல், சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு தன் பையில் மொபைலை போட்ட பின்னர், தன் கண்கள் கலங்கியிருப்பதை கண்டு, ஆச்சரியப்பட்டாள். உணர்வுகளை புதைத்து இயந்திரமாய் மாறி பல வருடங்கள் ஆகியதாய் நினைத்தவளுக்கு, அவள் கண்களிலிருந்து சிதறிய இரு துளிகள் 'நானும் மனுஷிதான் ' என உணர்த்தியது.

பரபரப்பான மும்பை சிட்டியில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு மனிதநடமாட்டம் குறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஜெய்பூரிலுள்ள அந்த சிறியமரவீட்டின் மாடியில் நின்றவளுக்கு, தன் வாழ்கை படம் போல் கண்முன் ஓடியது.

அவள் 'மைதிலி ஜனார்த்தனன்' Mythili industriesனுடைய ஒரே வாரிசு, தலைமை மற்றும் செயல் அதிகாரி எல்லாம் அவள் மட்டுமே!!

"நான் எதை எதிர்பார்த்து இங்க வந்துருக்கேன். நான் எடுத்த முடிவு சரிதானா? எவ்வளவு நாள் ஆனாலும் நான் மறுபடி அந்த தங்ககூண்டுக்கு போய்தானே ஆகனும்!! பொறுப்பான பதவியில இருக்க நான், இப்படி எல்லாத்தையும் 'அம்போ 'னு விட்டுட்டு வந்தது சரியில்லை. ஆனா என்னால முடியலயே!!! மூச்சு முட்டுது.... அங்க இருந்த தனிமையை விரட்டலாம்னு, இங்க வந்தேன். இங்கயும் அதே தனிமைதான் இருக்கும் என்ற நிதர்சனத்தை எப்படி மறந்தேன்!?" ஒருவாராய் தன்னை தானே தேற்றிக்கொண்டவளுக்கு விரக்தி புன்னகை தோன்றியது.

சுற்றியுள்ள மரம் சூழ்ந்த பகுதி, காட்டுப்பகுதி போல தோன்றினாலும், அது உண்மையில் இயற்கை காதலர்களுக்காகவும், தனிமைவிரும்பிகளுக்காகவும் பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட சூழல். ஒருவரையொருவர் எளிதில் அணுக முடியாதபடி குறிப்பிட்ட இடைவெயிலில் அமைக்கப்பட்ட விருந்தினர் இல்லம். கீழே இறங்கி, மாலைநேர தென்றலில் லயித்தவாறு கால் போன போக்கில் நடந்தாள் மைதிலி.

'எவ்வளவு நாளிற்கு இந்த வனவாசம்!? என்ன செஞ்சாலும் என்னோட தனிமையுணர்வு என்னவிட்டு போக மாட்டேங்குது... எல்லாத்தையும் விட்டுட்டு, மறந்துட்டு கொஞ்சநாளுக்கு சந்தோஷமா இருக்கனும். இங்க இருக்குற வரைக்கும் மனசுல எதையும் நினைச்சு குழப்பிக்காம இருக்கனும்.'

முடிவுக்கு வந்த அவள் முகம் தெளிவுற்றிருந்தது. இதழ்களில் விரிந்த புன்னகையுடன், காற்றை இழுத்து சுவாசித்துக்கொண்டு முன்னேறி நடந்தாள். இயற்கையை ரசித்தபடி கண்களை சுழல விட்டவளுக்கு,, கண்ணுக்கெட்டிய தொலைவில் மனித நடமாட்டமே இருப்பதாய் தெரியவில்லை.

"எதோ நினைப்புல இவ்வளவு தூரம் வந்துட்டோமே?!! இருட்டுறதுக்குள்ள திரும்பி போய்டலாம்.. அதுதான் Safe. "

வேகமாய் வந்த வழியே திரும்பி செல்ல தொடங்கினாள். ஓட்டமும் நடையுமாய் சென்றுக்கொண்டிருந்தவள், கீழே படர்ந்திருந்த மரத்தின் வேரை கவனிக்க தவறினாள். அதை சுதாரிக்கும்முன் அவள் கீழே விழந்துவிட, அருகே இருந்த மணற்சரிவினால், மேலும் தடுமாறி உருண்டு ஓடத்தொடங்கினாள்.

தற்காப்புகலைகளும், யோகா கலையும் தகுந்தநேரத்தில் செயல்படுத்த முடியாமல் போக, அவளை மீறி உருண்டு சென்றுக்கொண்டே இருந்தாள். பாதையும் சரிவும் குறையாமல் சென்றுக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் 'தான் சென்றுக்கொண்டிருக்கும் பாதை ஆபத்தானது என உள்ளுணர்வு சொல்லியது.

அவள் நினைப்பை பொய்யாக்காமல், அந்த நீண்ட சரிவு பாதை அவளை ஒரு ஆழமான குழியை நோக்கி கூட்டிச்சென்றது. அருகே செல்லும் போதுதான், அது 'புதைக்குழி 'யோ என பயம் கிளம்பியது மைதிலிக்கு.

கீழே சென்று கொண்டிருந்தவள், எழ முயற்சித்தாள். அவளின் உடல் அத்தனை பலமும் வடிந்தாற் போல, பலகீனமாய் இருந்தது. பயத்தில் கண்கள் மூடியவள், கண்கள் தானாய் சொருகி மயங்கினாள்.

அவள் மயங்கிய அந்த நொடி, புதைக்குழிக்குள் சென்று விழுந்தாள். அதில் அவள் மூழ்குவதற்க்குள், ஒரு வலிய கரம், அவளை ஒரே மூச்சில் இழுத்து தரையில் கிடத்தியது. மயக்கம் தெளியாமல் இருந்தவளை, என்ன செய்வது என தெரியாமல் அவன் விழித்து கொண்டிருந்தான்.

பின்பு, வேகமாய் சென்று அருகிலிருந்த சிற்றருவியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் ஊற்றினான். (ஆம், தெளிக்கவில்லை.. ஊற்றினான்)

அதில் பதறி எழுந்தவள், தான் இருக்கும் நிலையை கண்டு 'நம்ம நல்லா இருக்கோமே!! ' என நிம்மதியானாள்.

தன்னை ஆசுவாசப்படுத்தியவள், தன் கண்களை சுழற்றி பார்த்தாள். அவள் பார்வை வட்டத்தில் நின்ற ஆடவனின் முகம், 'பசை ' போட்டதை போல ஒரே பார்வையில் அவள் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. அவன்தான் தன்னை காபாற்றியிருக்ககூடும் என யூகித்தவளாய் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவனிடம் இயல்பாய் பேச்சுக்கொடுத்தாள்.
"ஹலோ? "
அவனிடம் இருந்து பதில் இல்லாமல் இருக்கவும், எழுந்து அவனருகே செல்ல எத்தனித்தாள்.

உருண்டு வந்ததால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் நெருப்பாய் தகிக்க, அவற்றை அலட்சியம் செய்தபடி அவனை நோக்கி சென்றாள்.

அவன் கண்கள் ஒருவித மிரட்சியுடன் சுற்றிலும் அலைபாய்வதை கண்ட மைதிலி, அருகே சென்று அவன் முகத்திற்க்கு நேரே கையசைத்தாள்.

"Hello... நீங்கதான் என்னை காப்பாத்துனதா? ரொம்ப தேங்க்ஸுங்க!! நீங்கமட்டும் இந்த உதவி பண்ணலனா, நான் என்ன ஆகிருப்பேனோ தெரில!? " அவள் பேசிக்கொண்டே இருக்க, அவளை தவிர்த்தபடி அவன் நடந்து சென்றுக்கொண்டிருந்தான்.

அவன் தன்னிடம் பேசாதது, ஏனோ அவள் மனதை வருத்தியது.

"என்ன பேசமாட்றாரு? ஒருவேளை ஹிந்தி யோ?? "

வேகமாய் ஓடி அவனை வழிமறித்தவள், "நீங்க ஹிந்தியா? ஆப் கஹான் ரஹ ரஹே ஹை?? " அவன் எங்கே தங்கியிருக்கிறான் என கேட்டாள் மைதிலி.

அதற்க்கும் பதில் சொல்லாமல் அவன் செல்லவும், வியப்பில் விழிவிரித்தாள். முதன்முறையாய் அவளை தவிர்க்கும் ஒரு ஆண்மகனை பார்க்க, அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அவனை விடாது துரத்தியவள், அவனின் கரம் பிடித்து, அவனை போக விடாமல் தடுத்தாள். தன் செயல் தனக்கே புதிதாய் தோன்ற, முகத்தில் சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

அவனோ, மைதிலி கையிலிருந்து தன் கையை உருவியபடி, "விடு நான் போனும்!" என அழுதான். அவன் அழுவதை அதிர்வுடன் பார்த்த மைதிலியின் பிடி தானாய் தளர்ந்தது. செல்லும் அவனையே பார்த்தபடி நின்றாள் மைதிலி.

நான்கடிகள் நகர்ந்தவன், பின் தயங்கி, "எனக்கு பயமா இருக்கு... என்கூட நீ வரியா?"என அழுதபடியே கேட்டான்.

ஆறடிக்கு குறையாத உயரத்தில், துளியும் அதிகமில்லாத, கச்சிதமான உடல்வாகுடன், 'படித்தவன்' என பார்த்ததும் தோன்றும் அளவில், அவளை பொறுத்தமட்டில் "ஆணழகனாகவே " தோன்றினான் அவன்.

அவனுடன் சேர்ந்து நடந்தவளுக்கு தன் கவலைகள் மறக்குமளவு, அவன் நடவடிக்கைகள் குழப்பத்தை தந்தன.

யோசித்தபடி வந்தவளின் கரம் பற்றினான் அவன். இன்னமும் நிற்காத அழுகையுடன், "நீ என்னை விச்சு மாமா கிட்ட கூட்டிட்டு போறியா? ப்ளீஸ்..."என்றான்.

முதலில் குழம்பியவள், " யாரு அது? "என்றாள். "அய்யோ அப்போ உனக்கு தெரியாதா? நான் எப்படி என் வீட்டுக்கு போவேன்?? பயமா இருக்கே... " முகம் மூடி மீண்டும் அழத்தொடங்கினான்.

அதுவரை அவனை விசித்திரமாய் பார்த்தவள், அவன் அழுவது பொறுக்காது, "அழாதீங்க.. நான் கூட்டிட்டு போறேன்... உங்க அட்ரெஸ் சொல்லுங்க? "என்றாள்.

"அட்ரெஸா? அதெல்லாம் எனக்கு தெரியாதே?! ஆனா எங்க வீட்ட சுத்தி பெரிய தோட்டம் இருக்கு. ப்ளூ கலர்ல இருக்கும் எங்க வீடு "

தலைசுற்றுவதை போல இருந்தது மைதிலிக்கு. தன் மூளை கண்டுகொண்ட உண்மையை அவள் மனதால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...

"இவன் மனநிலை சரியில்லாதவனா ?"

இல்லை என மனம் கூவினாலும்,, அது உண்மையே என்பதற்கு சாட்சியாய் அவள் கண்முன்னே இருந்தான் மைதிலியின் ராமன்!

-வருவான்...

 
உங்களுடைய "கரைகிறேன்
உனது கண்ணசைவில்"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலை மீண்டும்
படிக்க ரீ ரன் தந்ததற்கு
ரொம்பவும் சந்தோஷம்,
பிரியா மோகன் டியர்
 
Last edited:
Top