Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 28 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 28 ❤️‍🔥

"பாடம் நீயெனில்
கல்வி கரையில.........!!!"


"மூண்டும் மூலா காதல் நெருப்பை கண்டு மிரளாத ஆட்கள் யாருண்டு புவியிலே!?"


அரசனாயினும்... ஆண்டியாயினும்...

காதல் வந்தால் ஓர் கணம்
"அவள் கிடைப்பாளா!?" என்ற ஏக்கமும்.

"அவளுக்கு தன்னை பிடிக்குமா!? பிடிக்காதா!?" என்ற பயமும்.

"பிடிக்க வேண்டுமே!" என்ற மெனக்கிடலும் இல்லாத 'வாழ்வு ஏது!?'

"தேன் கூட்டி அமிலம் சுரக்கும் சுரபி காதல். விழாதவர் கிடையாது!விழுந்து எழுந்தவரும் கிடையாது!"

"இவ்வையகத்தில் மாண்டவர் கூட உயிர்த்து எழுந்த வரலாறுகள் உண்டு புராணத்தில்.ஆனால்,காதலில் கரைகண்டவரை கண்டது யார்!? பிறர் கூறக்கேட்டது தான் யார்!?"

அப்படி மீளாத மீள முடியாத பெரும் நோயில் சிக்கிய ஏகன் சென்றது நண்பனின் இல்லம் தான்.

சுத்தத்திலும் சுத்தம் படு சுத்தம் எந்த அளவிற்கு என்றால் குளிர் சாதன பெட்டிக்குள் ஒன்றுமே இல்லாத அளவிற்கு துலக்கி வைத்த பாத்திரம் போல சுத்தமாக இருந்த நண்பனின் இல்லத்திற்கு வந்தவனோ உள்ளே நுழையது காரிலே அமர்ந்து கொள்ள.

எப்போதும் போலே உள்ளே சென்று குண்டுக்கட்டாய் கடத்தி வந்தான் இக்னேஷ்.

"டேய் நீங்க வர்றதுக்கு முன்னாடி கால் பண்ணிட்டு வரமாட்டீங்களாடா!? பாவிங்களா! மார்னிங் ஃபுல்லா கிளினிக்ல இருந்துட்டு நைட் லேப்ல ஒரு ரிபோர்ட் பிரின்டிங் பிராப்ளம் அதை முடிச்சிட்டு விடியும் போது தான்டா வந்தேன்.ஏன்டா சடையா அவன் தான் புள்ளகுட்டிகாரன் தெரியலை.நீ சிங்கிள் தானடா நீயாவது சொல்லக்கூடாதா செவ்வாழ!?"


கத்தாய் கத்தி தொண்டை நீர் வற்றி அவனாக அமைதியாகும் வரை அவனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.


"டேய் எப்பா! சாப்பாடாவது வாங்கி குடுத்து கூட்டிட்டு போங்கடா இல்லைன்னா போன முறை மாதிரி அந்த நாடகம் நடுவுல வந்து ஆட்டத்தை குழப்பி எனக்கு சோறு இல்லாம பண்ணிட போகுது!" புலம்பித் தீர்க்க.

இக்னேஷ் சென்று உணவை வாங்கிவர இம்முறை சரவணம்பட்டி செல்லாது நேரே ஆணை மலையில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்றனர்.

நண்பர்களை தனித்து விட்டு, இக்னேஷ் பாதுகாவலர்களுடன் வெளியே நிற்க.

"என்ன மச்சான் உனக்கு என்ன தான்டா வேணும்? எதுவா இருந்தாலும் சொல்லு பார்த்துக்கலாம்.ஆனா நான் சாப்பிட்டு முடிச்சிட்டு தான் பதில் சொல்லுவேன் டீல் ஓகே வா!?"

சொன்னதோடு பொறுமை காற்றில் பறக்க உணவை உண்ணத் தொடங்கி இருந்தான் நவநீ.

நவநியை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அவன் உண்ணும் வரை 'பொறுமை' காத்திருந்தான்.

மருத்துவன் என்பதால் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் உறங்கியும், உண்டும், உடலை பேண பயிற்சியும் என்று வாழும் பிறவி அவன்.

'நேரமே இல்லை!' என்று புலம்பும் மாந்தர்கள் மத்தியிலே; கிடைக்கும் நேரத்தை புலம்பலுக்கு தாரைவார்க்காது தன்னை பேண,செப்பனிட பயன்படுத்தும் ஒருவன்.

பார்ப்பதற்கு பேச்சு வழக்கில் எல்லாம் கோமாளி போல் இருக்கும் இவன் பார் போற்றும் ஓர் மனோ தத்துவன்.

எதிர் இருக்கும் நபரின் எண்ணப்போக்கை நொடியில் கணித்து விடுவான்.

கோமாளி வேடமிட்டு எதிரியை ஏமாற்றி சுலபமாய் வெல்வதில் வல்லவன்.

'ஏவ்.......' என்றொரு பெரும் சத்தத்துடன் ஏப்பத்தை விட்டு ஏகன் அருகே அமர்ந்தவன்

"இப்போ சொல்லுடா என் தளபதி உனக்கு என்ன பிரச்சனை!?" என்றான்.

"நவி" என தொடங்கி மனைவியின் அருகே நெருங்கி, நெருங்கா தன் நிலையைக் கூறினான்.

கேட்டிருந்தவனோ,"மச்சான் இதுக்கு சிம்பிளா ஒரு ஐடியா சொல்லவா!? பேசாம தங்கச்சிகிட்டயே போய் உண்மையை சொல்லிடேன்.எனக்கு தெரிஞ்சு இது கொஞ்சம் பெட்டர் சாய்ஸ்!"

"நவி அவகிட்ட எப்படி நான் சொல்றது? எனக்கு இதை சொல்லாமல் எப்படி ஹாண்டில் பண்றதுன்னு மட்டும் சொல்லுடா.அவ என்ன பாவமாவோ, இரக்கமாவோ பார்க்கறதுல விருப்பம் இல்ல மச்சான்!" என்றான் ஏகன்.

"எனக்கு என்னவோ ஏகா நீ அந்த பொண்ணுகிட்ட பேசி புரியவை.ரிதம் மட்டும் புரிஞ்சுகிட்டா அவ்வளவு தான் பிராப்ளம் சால்வ்ட்.மறைக்கிறேன்னு சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டபடுத்தாத.நான் அவ்வளவு தான் சொல்லுவேன்!" அறிவுரை வழங்க.

"சரிடா! நான் டைமிங் பார்த்து சொல்ல முடியுமா பார்க்கறேன்" என்றவன் நண்பனை கிளினிக்கில் விட்டுவிட்டு அலுவலகம் சென்றான்.

அன்றைக்கு முக்கிய சந்திப்பு ஒன்று இருந்தது.அதில் நூறு கோடி பெறுமானம் பெரும் நகை ஒன்றின் வடிவமைப்பு சமர்ப்பிக்க வேண்டும்.

அதில் யாரின் வடிவமைப்பு தேர்வு செய்யப்படுகிறதோ அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக நூறு கோடி ரூபாய் கொடுக்கப்படும்.

பெரும் பணக்காரராக உலகில் உள்ள நூறு பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒருவரின் மகளுக்கு திருமணமாம்.மகளின் மீது அன்பு கொண்ட தந்தை தன் அன்பை இவ்வாறு காண்பிக்கின்றார்.

"பெற்றவர் கோடீஸ்வரரோ!? இல்லை தினக் கூலியோ!? தந்தையின் அன்பு மட்டும் மகளுக்கு என்றுமே விலைமதிப்பற்ற கோகினூர் வைரமே!"

அதற்கான ஆயத்தங்கள் நடைபெற. வந்த பின்பே கவனித்தான் இக்னேஷ் வீட்டில் இருக்கும் கோப்பையில் தான் இன்றைக்கான வரைபடம் உள்ளது.

'ஐயோ!' என்று ஆனது அவனின் நிலை.

இது மட்டும் ஏகன் அறிந்தான் ஆடித்தீர்ப்பான் என்பதால் சிந்திக்காது அழைத்துவிட்டான் நவிக்கு.

"என்னடா சடையா எதுக்கு கால் பண்ணியிருக்க!?" என்றவாறு அழைப்பை ஏற்றவன்

"சோடா" என்று ஆரம்பித்து மறுபுறம் கூறிய செய்தியில்

"உங்களுக்கு வாக்கப்பட்டு நான் அல்லாடுறேன்டா!" நவநீ பொறுமலாய் பொறுமியவன்

தொடர்ந்து, "டேய் மச்சான் நான் இப்போ போய் எடுத்துட்டு வர நேரம் ஆகலாம்.
அதுனால நீ ரிதமை அந்த ஃபைலை எடுத்துட்டு ஈச்சனேரி பக்கம் வெய்ட் பண்ண சொல்லு நான் என் அசிஸ்டன்ட் கார்ல போய் பிக் அப் பண்ணிக்கிறேன்!" என்று உபயம் அளிக்க.

அவன் சொல்வதும் 'சரி' என்று தோன்ற. அடுத்த அழைப்பு ரிதம் எண்ணிற்கு பறந்தது.

அவளோ, "எல்லாம் தன்னால் தானோ!? தான் தானே அவனை காலையில் மன கஷ்டத்திற்கு ஆளாக்கியது!"

குற்றவுணர்வோடு 'கோப்பை சரியானதா?' என்பதை ஒருமுறைக்கு இருமுறை இக்னேஷிடம் கேட்டு தெளிவு பெற்ற பின்பே வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ஈச்சனேரி பயணித்தாள்.

ரிதம் அவ்விடம் செல்வதற்கும், நவநி வருவதற்கும் நேரம் சரியாக இருக்க அவளையும் தன்னுடனே அழைத்துக் கொண்டு நண்பன் வடிவமைப்பு காட்சிக்கு வைக்கப்படும் இடம் நோக்கி சென்றான்.

ரிதம் அவ்விடத்தின் அலங்காரம் கண்டு விழி விரிப்பாள் என்று நவநீ எதிர்பார்க்க அவன் ஆவலை பொய்யாக்கி விடுவிடுவென்று தன் கைகளில் இருந்த கோப்பையை இக்னேஷிடம் ஒப்படைக்க சென்றுவிட்டாள்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஓர் நொடி நின்று பார்க்க தூண்டும் அந்த அழகும் பெண்ணவளை ஈர்க்காது போகின்றது எனில் அதற்கு மூன்றே காரணம் தான் இருக்க இயலும் என்றது நவநியின் மருத்துவ மூளை.

ஒன்று, "அவள் இதைவிட பெரும் ஆடம்பரங்களை கண்டவளாக இருத்தல் வேண்டும்!"

இரண்டு, "வேலை என்று வந்தால் சுற்றம் மறக்கும் ஏகனின் பெண் வடிவாக அவள் இருக்க வேண்டும்!"

மூன்று, "அவளின் கவனத்தை இந்த எழிலையும் தாண்டிய ஏதோ ஒன்று ஆக்ரமிப்பு செய்திருந்தல் வேண்டும்!"

முதல் இரண்டும் பற்றி பெரிய கருத்து இல்லை என்றாலும்; நண்பனின் புலம்பல் கேட்ட பிறகு 'ரிதம்' எனும் இசைமகளின் மனதில் ஏகன் ஏகமாய் குடியேறி விட்டான் என்றே தோன்றியது.

"சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ் ரிதம்!" என்று உண்மையான வருத்தத்துடன் சடையன் மன்னிக்கவும் இக்னேஷ் நின்றிருக்க.

"அண்ணா இதுக்கு எல்லாமா கவலைபடுவாங்க நீங்க ரொம்ப மரியாதையா மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்!"என்றவள் நகர.


"என்னம்மா ரிதம் வந்த வேலை முடியாம கிளம்பர!?"

கிண்டலாய் கேட்டவாறு வந்தான் வாகனத்தை நிறுத்திவிட்டு இவர்களை நெருங்கிய நவநீ.

'ஆம்!'

அவளின் திருட்டு விழி அங்கும் இங்குமாக வலைவீசி தேடியது மன்னன் வரவை.அதை கண்டு தான் அவ்வாறு கூறினான் நவநீ.

"இல்ல அண்ணா ஃபைல் குடுக்க தானே வந்தோம் அதுதான் குடுத்தாச்சே அப்போ கிளம்பலாம்!" என்றாலும்;

நகராது நின்றவளின் கவனம் எல்லாம், "ஓர விழியில் சிக்கிவிட மாட்டானா மங்கை மணாளன்!?" என்பதாகவே இருந்தது.

இக்னேஷ் தான் சூழலை மாற்ற, "என்னா சோடா நீ இன்னுமா கிளம்பல கிளம்பு கொஞ்சமாவது சுத்தமான காத்து வரட்டும்!" என்றான் அதுவரை இருந்த பதட்டம் மறைந்த நிம்மதியில்.

இருவரின் பேச்சில் சுவாரஸ்யமான ரிதம் இருவருக்கும் இடையே பேசத் தொடங்கினாள்.

"அது என்னன்னா நேம்? போன தடவை வீட்டுக்கு வந்தப்போ கேட்கணும் நினைச்சேன் நீங்க ஏன் மாத்தி மாத்தி இப்படி பேர் வச்சு இருக்கீங்க!?" சந்தேகம் கேட்டாள் ஆம்பல்.


"இவன் தலையை பாரும்மா நல்லா சடைவச்சு திருவண்ணாமலை பக்கம் சாமியாரா போக வேண்டியவன் இங்க வந்து சுத்திட்டு இருக்கான்!" என்று பொறாமையில் பொங்கினான் நவநீ.


"இல்ல ரிதம் இவன் பொய் சொல்றான் பொறாமைக்காரன்.இவன் தலைல இருந்த முடி எல்லாம் கொட்டி சொட்டைய மறைக்க முன்னாடி முடியை விட்டுட்டு சுத்துறான்.
அதுமட்டுமா நல்லா பெரிய கண்ணாடி போட்டுட்டு சுத்துறான் அதும் பாரு மூஞ்சிய மறைக்கிற மாதிரி நல்லா சோடா புட்டியா அதனால் தான் அவன் பேரு சோடா!" வெம்பினான் இக்னேஷ்.


அன்றைய சிறப்பு அறிவிப்பிற்கு நேரமாக இக்னேஷ் உள்ளே நுழைய.

ரிதமுடன் அங்கே இருக்கும் வரவேற்பறையில் காத்திருந்த நவநீ நண்பனின் நிலை பற்றி பேசவேண்டும்.

'என்ன பேச!?'

'எப்படி பேச!?'

மனதிற்குள் அசைபோட்டு ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

அவன் பேச்சை கேட்டு, 'நண்பன் வாழ்வு சிறக்க வேண்டும் அல்லவா!' அதனால் தான் இவ்வளவு யோசனை அவனுள்.

"ரிதம்" என்று அவன் தொடங்க

"அண்ணா" என்று இவளும்

ஒரே நேரத்தில் தொடங்க,இருவரும் சிரித்துக் கொண்டனர்.

"சொல்லுமா என்ன கேட்க வந்த கேளு!?" என்றான் நவநீ.

பெண்ணவளோ, "அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அவருக்கு எதும் பிரச்சனையா!?" என்று தொடங்கிய நேரம்.

இறுதி அறிவிப்பை வெளியிட நேரம் நெருங்க இருவரின் கவனமும் அங்கே திரையில் ஓடிய காட்சியில் பதிந்தது.


அன்றைய தினத்தின் சிறந்த வடிவமைப்பு என்பது ஏகன் குழுமத்திற்கு கிடைக்க செய்தி அறிந்த மறுகணம் விழாவின் தலைவரான மணப்பெண்ணின் தந்தையிடம் மட்டும் தான் செல்வதாக கூறியவன்.

மற்றவற்றை தன் உதவியாளருடன் பேசிக்கொள்ளுமாரு கூறி அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டான்.

நொடிக்குள் மனைவி இருக்கும் இடம் வந்து சேர்ந்தவன் இக்னேஷை முறைக்க. அவனோ மன்னிப்பை யாசிக்கும் பக்தனாக நிற்க.

"இனி இதுபோல் நடக்க கூடாது!"
இறுதிக் கட்டளையுடன் வாகனம் நோக்கி முன்னால் செல்ல.


"அண்ணா எப்படி அவருக்கு நாங்க இங்க இருக்கது தெரியும்!?" என்றாள் ரிதம்.

"அது கைல காலைல இருந்து இல்லாத ஃபைல் திடீர்னு எங்க இருந்து வந்ததுன்னு பாஸ் கேட்டாங்க!? நானும் சொல்லிட்டேன்!" என்றான் அந்த உண்மை விளம்பி.


"டேய் சோடா பாஸ்கிட்ட தனியா திட்டு வாங்க விட்டுட்டு போய்டாதடா..!"


தன் பாஸின் கோபத்தில் இருந்து தன்னை காக்க வருமாறு சோடாவை சடையன் அழைக்க.


"மச்சான் எனக்கு வேலை இருக்கு... ஃபைல் கொடுக்க தான் வந்தேன் நான் கிளம்பறேன் பாய்..!!!"

கையசைத்து நக்கலாய் டாட்டா காண்பித்துக் கொண்டே வேலை இரு
ப்பதாக கூறி பாதியில் கழண்டு கொண்ட நவநியை கருக கருக வறுத்தெடுத்த இக்னேஷ் ரிதமை அழைத்துக் கொண்டு காரிற்கு வந்திருந்தான்.

வீட்டினை நோக்கி பயணித்த கார் இக்னேஷின் கரத்தில் குழந்தையாய் தவழ்ந்தது.
 
"நவி அவகிட்ட எப்படி நான் சொல்றது? எனக்கு இதை சொல்லாமல் எப்படி ஹாண்டில் பண்றதுன்னு மட்டும் சொல்லுடா.அவ என்ன பாவமாவோ, இரக்கமாவோ பார்க்கறதுல விருப்பம் இல்ல மச்சான்!" என்றான் ஏகன்.


இதுதான் உன் பிரச்சினையா, ஏகன்?



உன்ன பார்க்கறப்பவும் பாவமாத்தான் இருக்கு......


என்ன பண்றது? ரத்தத்தை அடையணும்னா உன் காதலை சொல்லி தான ஆகணும்.... 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑
 
இதுதான் உன் பிரச்சினையா, ஏகன்?


உன்ன பார்க்கறப்பவும் பாவமாத்தான் இருக்கு......


என்ன பண்றது? ரத்தத்தை அடையணும்னா உன் காதலை சொல்லி தான ஆகணும்.... 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑 💑
டேய் அப்பாசாமி உன்மேலையும் மக்களுக்கு இப்பதான் இறக்கம் வருது அப்டியே மெயின்டெய்ன் பண்ணிட்டு போயிட்டே இருந்தா உன்ன யாராலையும் அசச்சுக்க முடியாது அசச்சுக்க முடியாது அசச்சுக்கவே முடியாதுடா.....😂😂😂🤣🤣🤣
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

அடேய் மடையா 🤭 🤭 🤭 🤭 🤭
நவநீ நீஎன்ன ஐடியா மணியா டா?!!!!.
எதுக்கெடுத்தாலும் பொசுக்பொசுக்குன்னு உன்னைய கையோட அள்ளிகிட்டு போயிடறான் இந்த குடுமிக்காரன்.

ரிதம் குட் கேர்ளாக்கும்.
சொன்னா புரிஞ்சுகுவா. நோ பரிதாபப்பார்வை.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

அடேய் மடையா 🤭 🤭 🤭 🤭 🤭
நவநீ நீஎன்ன ஐடியா மணியா டா?!!!!.
எதுக்கெடுத்தாலும் பொசுக்பொசுக்குன்னு உன்னைய கையோட அள்ளிகிட்டு போயிடறான் இந்த குடுமிக்காரன்.

ரிதம் குட் கேர்ளாக்கும்.
சொன்னா புரிஞ்சுகுவா. நோ பரிதாபப்பார்வை.
அதெல்லாம் தெரிஞ்சா அவன் என்னைக்கோ அம்மா மகன் கூட்டுக்குள்ள சேர்ந்திருப்பான் இல்ல😳😳😳😳😳😳
 
Top