Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 4

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 4

ஆடவனின் ஏய் என்ற கர்ஜனையில் பயந்து ஒடுங்கி கட்டிலின் விளிம்பில் அடைக்கலம் புகுந்தால் பெண்ணவள்.

" ஏய் யாரை பாத்து கொலைகாரன்னு சொல்றே.. நான் கொலை பன்றதை நீ பார்த்தியா டி.." என்றவனுக்கு அவள் அப்படி கூறியதில் சற்றும் ஆத்திரம் தணியவில்லை.. அவளை அடிக்க கை ஓங்க அதற்குள்ளாகவே அவனின் கண்ணத்தில் ஒரு கரம் அழுத்தமாய் பதிந்து போனது.

அதில் அதிர்ந்து திரும்பியவன் முன்னே கோபமுகமாய் நின்றிருந்தார் தாட்சாயினி.. அவரின் பின்னே வர்த்தனும்.

"பாட்டி.." என்றான் கோபமாய்.

கேவலம் அவளுக்காக தன்னை அடித்ததை ஆடவனால் சுத்தமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவளின் முன்னே அடிவாங்கியது அவனின் தன்மானத்தை உசுப்பியது.

" என்ன டா பாட்டி ஒரு சின்ன பொண்ணுகிட்ட உன்னோட வீரத்தை காட்டுறியா.. இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கலை சிபி.. என்னோட பேரனா நீன்னு இருக்கு.. அது என்னடா பொம்பளை புள்ளை மேல கை வைக்குற பழக்கம்.. வேணாம் சிபி உன்னோட இந்த அதிகாரத்தை மாதுகிட்ட காட்டாத.. அவ யாருன்னு தெரியுமா டா உனக்கு.." என்றார் ஆதங்கமாய்.

"ஏன் தெரியாது நல்லாவே தெரியும் என் குடும்பத்துல இருந்து என்னை பிரிக்க வந்த ராட்சசி.. சொத்துக்காக என்னை என் குடும்பத்துல இருந்து பிரிச்சி உங்க பாசத்தை மொத்தமா எடுத்துகிட்ட வஞ்சகி.. என்னை மயக்கி கல்யாணம் செய்துகிட்டா என்னோட சொத்தும் இல்லை சேர்ந்து கிடைக்கும்.. இதுக்கு பேசாம அந்த தொழிலே பாக்கலாம்.." என்றவனுக்கு அடுத்த அடி விழுந்தது.. அங்கே வர்த்தன் கோபமுகமாய் நின்றிருந்தார்.


அவனின் வார்த்தையின் பொருளை அறிந்த பெண்ணவளுக்கு அழுகை நெஞ்சடைத்தது.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை கூறுகிறான்.

ஆனால் அதை சொல்வியவனுக்கு அதன் பொருள் விளங்காமல் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்.. கோபம் அவனின் புத்தியை மழுங்கடிக்க அவளின் மேல் மேலும் வன்மம் வளர்த்துக் கொண்டான்.

"தாத்தா.." என்றான் ஆத்திரமாய் சீறியபடி.

"என்ன டா தாத்தா ஒரு சின்ன பொண்ண என்ன வார்த்தை சொல்லிட்ட சிபி.. அவ அப்படி இருந்ததை நீ பார்த்தியா.. எப்படி டா அநாவசியமா ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசுற.. பூவை விட மென்மையானவ டா இந்த மாந்தளிர்.. ஆனா நீ அவளை அசிங்கப்படுத்தி பேசுற.. வேணாம் எங்களுக்கு இப்படி ஒரு பேரன் எப்பவும் வேண்டாம் இங்கேயிருந்து போ.. இனி இந்த வீட்டுக்கு நீ வர்றதா இருந்தா இந்த பொண்ணையும் நம்ம குடும்பத்தோட பொண்ணா ஏத்துக்கற மாறி இருந்தா வா.. இல்லையா இந்த வீட்டு வாசப்படியை மிதிக்காதே.." என்றார் வர்த்தன் ஆவேசமாய்.

அவரின் வார்த்தையில் இன்னுமின்னும் கோபமடைந்த சிபி இருவரையும் கோபமாய் பார்த்தவன் மாந்தளிரை திருப்பி வெறுப்பாய் பார்த்தான்.. அவனின் அந்த வெறுப்பான பார்வை வஞ்சியவளின் நெஞ்சினுள் பயத்தை தந்தது.

அன்றோடு யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவன் தான் வர்த்தனுக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மருத்துவமனையில் மட்டும் சென்று பார்த்து வந்தான்.

அன்று தான் அரவிந்தன் மாந்தளிரை கண்டது.. அவளின் மென்மையான குணம் முகத்தில் இருக்கும் அப்பாவி தனம் என எல்லாம் அவளின் அதீத பாசம் என எல்லாம் அவளை தங்கையாக பாவிக்க வைத்தது.. அதே பாசத்துடன் மாதும்மா என்ற பாசமாய் அழைத்தவன் காலப்போக்கில் தங்கச்சிமா என்று மாறினான்.

அதுவும் சிபியின் பார்வை அவளின் மேல் கோபத்தில் படிந்தாலும் அவன் விழிகளில் இருந்த உணர்வு அரவிந்தனையும் யோசிக்க வைத்தது.

அதற்கு தகுந்தாற்போல் வர்த்தனின் உடல்நிலை ரொம்பவே மோசமாக எல்லோரும் அவர் பழைய நிலையை அடைவார் என்று உணர்ந்தாலும் பெண்ணவள் மட்டும் தன்னை பாசமாய் பார்த்துக் கொண்ட உறவு இன்று படுக்கையில் கிடப்பது நினைத்து துடித்தாள் பெண்ணவள்.

அவளின் துடிப்பில் இருந்த பாசத்தை சிபி உணர்ந்தாலும் தன்னை கண்டாலே பயந்து போய் மறையும் பெண்ணவளின் அருகே நெருங்க விருப்பமில்லாமல் இருந்தான்.

ஆனால் அரவிந்தனுக்கு அது எதுவும் இல்லாதது போல் அவளை சமாதானம் செய்தான்.. அதை தூர இருந்த பார்த்த சிபியின் முகத்தில் எரிச்சல் வந்தது.. அது எதற்கென்று அவனே அறியான்.

தங்கச்சி மா தாத்தாக்கு எதுவும் ஆகாது டா.. அவருக்கு வயசு ஆகுது இல்லை.. அதுனால இப்படி இருக்காரு..பாரு சீக்கரமே வந்து மாதுன்னு உரிமையா கூப்பிடுவாரு மா.. நீ நல்ல பொண்ணு தானே அழாத டா.. அங்கே பாரு பாட்டி தாத்தா வந்துருவாங்கன்னு எவ்வளவு கவலையா இருக்காங்க.. நீ என்னன்னா இப்படி பயப்புடற.." என்றான் பாட்டியை வம்பிழுத்தபடி.

பெரியவரோ அதை அறிந்தும் சற்று சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

யாரின் சமாதானமும் செல்லுபடியாகாமல் வஞ்சியவளோ தன் தாத்தா கண் விழிக்கும் தருணத்திற்காக காத்திருந்தவள் கோவிலுக்கு சென்று அந்த ஆண்டவனை மனதார வேண்டிக் கொண்டாள்.

அவள் சென்ற ஒரு மணி நேரத்தில் இங்கே கண் விழித்தார் வர்த்தன்.. அதற்கு மேல் தான் அனைவருக்கும் சற்று நிம்மதி ஆகியது.. அரவிந்தன் இதை மாந்தளிரிடம் சொல்ல விளையும் தருணம் அலுவலகத்தில் முக்கிய வேலையாக அவனை போக சொன்னான் சிபி.

அவன் இந்த பக்கம் சென்றதும் இவனோ மாந்தளிரிடம் விஷயத்தை சொல்லி அவளை அழைத்து வருவதாக தாட்சாயினியிடம் சொல்லிவிட்டு சென்றான்..போகும் அவனை தடுக்காமல் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தார் அவர்.

இங்கே தன் வாழ்வில் முதல் முறையாக கோவிலுக்கு வந்தவன் பெண்ணவளை நாலாபுறமும் சுற்றி பார்த்தவனின் கண்களில் விழுந்த பெண்ணவளை நோக்கி அதிர்ச்சியுடன் வந்தான் சிபி.

அங்கே முட்டி கால்களில் உதிரம் வழிய அந்த உலகை ஆளும் பரமேஸ்வரனின் முன்னே இருகரம் கூப்பியபடி கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் வஞ்சியவள்.

அவளை அந்த நிலையில் கண்டவனுக்கு மனம் பதறி துடிக்க அவளருகில் வேகமாய் சென்றான்.

அவள் அருகில் அவன் செல்வதற்கும் அவள் மயங்கி விழுவதற்கும் சரியாக இருந்தது.

"ஹேய் தளிர் தளிர் மா இங்கே பாருடி என்னாச்சி மா உனக்கு.. தளிர் தளிர்.." என்று பதட்டத்துடன் அவளின் முகத்தை தட்டிக் கொண்டிருந்தான்.

இதை அவனின் தாத்தா பாட்டி அரவிந்தன் இப்படி யார் அவனை பார்த்தாலும் சிபியா இது என்று தான் நினைப்பார்கள்.. அவன் கண்களும் முகமும் அத்தனை பதட்டத்தை கொண்டிருந்தது.. அதுவும் அவனுக்கு பிடிக்காத ஒரு பெண்ணுக்காக என்பது தான் முக்கியமான விஷயம்.

அதுவும் அவளை எல்லோரும் மாது என்றழைக்க இவனின் அழைப்பு சற்று வித்தியாசமாக இருந்ததை ஆடவன் உணர்ந்தானோ..?

ஆனால் ஆழ் மயக்க நிலைக்கு வஞ்சியவள் செல்வதற்கு முன்பாகவே அவனின் தீண்டலை உணர்ந்தவளுக்கு நடப்பதை நம்பத்தான் முடியவில்லை.. அதற்குள்ளாகவே முற்றிலும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டாள்.

அங்கிருந்தவர்கள் அவளின் மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியாக அவளுக்கு தண்ணீர் தெளித்தனர்.. ஆனால் பெண்ணவளோ சற்றும் கண் விழிக்கவில்லை.. அதில் பயந்தவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு மருத்துவமனையை நோக்கி செலுத்தினான்.. ஆனால் மனமெங்கும் அவளின் நிலை அவனை உயிர் கூடாக்கியது.

அவள் அப்படி இருந்தால் தான் ஏன் துடிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் அவன் எண்ணத்தில் இல்லை.. அவன் நினைவு முழுவதும் பெண்ணவளின் நிலை கவலை கொள்ள வைத்தது.

சற்று நேரத்தில் அவளை மருத்துவமனையில் சேர்க்க அதன் பின்பு அவளுக்கு எதுவும் இல்லை என்று சொல்லும் வரையில் அவனின் உயிர் துடித்ததை அவன் அறிந்தான் தான்.. ஆனால் அதன் காரணம் அறிந்தானா என்றால் அவனே அறியாதது.

மருத்தவர் வந்து அவளுக்கு ஒன்றும் இல்லை என்ற பின்பு தான் அவனின் உலகம் இயங்கியது.. மூச்சை உள்ளிழுத்து கொண்டவன் பெருமூச்சு விட்டான்.

அவன் அப்படி துடித்ததை இன்னும் நான்கு விழிகளும் பார்த்துக் கொண்டது.

அவளை பார்க்க அனுமதித்த பின்பு வேகமாய் உள்ளே சென்றவன் கந்தல் கொடியாய் படுத்திருந்தவளின் அருகில் சென்றான்.. அவன் கால்கள் சற்று நடுங்கவும் செய்தது.

அவள் படுத்திருந்த கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவன் கலைந்திருந்த அவளின் கூந்தலை மென்மையாய் ஒதுக்கிவிட்டான்.

"என்னை ஏன்டி இப்படி கொஞ்ச நேரத்துல துடிக்க விட்ட.. உன்னை கண்டாலே எனக்கு பிடிக்காது.. ஆனா இன்னைக்கு உனக்கு ஒன்னுன்னு உடனே என் உயிர் துடிச்சதே.. இதுக்கு அர்த்தம் என்ன தளிர்.. எனக்கு புரியலை டி.. சின்ன வயசுல இருந்து பாசம் என்னன்னு தெரியலை.. ஒரு அரக்கனா தான் வாழறேன்.. ஆனா இப்போலாம் உன்னை நான் பாக்குற பார்வை வித்தியாசமா எனக்கே தெரியுதே..

ஏன்டி என்னை நீ புரிஞ்சிக்கலை.. நான் கொலைகாரன்னு சொல்லும் தாண்டி தாங்காம உன்னை திட்டிட்டேன்.. அது தப்புன்னு நான் அடுத்த நாள்லே உணர்ந்துட்டேன்.. ஆனா உன்கிட்ட வந்து சாரி கேட்க என்னோட ஈகோ விடலை.. நான் என்னடி பண்றது..

ஐ திங்க் எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நினைக்குறேன்.. இல்லைன்னா யாருக்கும் துடிக்காத இந்த சிபி உனக்காக துடிச்சி தவிச்சேனடி.. ஆனா அந்த பிடித்தம் எந்தளவுக்குன்னு எனக்கு தெரியலை..

அன்பு பாசம் உன்கிட்ட தான் தெரிஞ்சிகிட்டேன்.. ஆனா எனக்கு பயமா இருக்கு டி.. நான் பாசத்தை பார்த்து வளர்ந்தவன் தான்.. ஆனா அது பாதியிலே முடிஞ்சி போச்சி.. எனக்கு யாரும் வேணாம்.. அப்படி மீண்டும் எனக்கு பாசமும் நேசமும் கிடைச்சி பாதியில போனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்.. அதுவும் உன்னை பத்தி சொன்னாங்க டி.. நீ ரொம்ப மென்மையானவ.. ஆனா நான் கொஞ்சமும் உனக்கு பொருத்தம் இல்லாதவன் டி..

நீ நல்லாருக்கனும் நல்லா தான் இருப்பே.. உன்னோட இந்த மனசு யாருக்கும் கிடைக்காத வரம் டி.. நீ என்கிட்ட இருந்தா நான் உன்னை அதிகமா காயப்படுத்துவேன் டி.. வேணாம் நான் உன்னை விட்டு போறேன்.. நல்லாரு தளிர் மா.." என்று மயக்கத்தில் இருந்தவளிடம் மனம் விட்டு பேசியவன் தன் கண்களில் வழிந்த கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாய் வெளியேறிவிட்டான்.

அதன் பின்பு அவளை காண அங்கே அவன் வருவதில்லை.. அவளும் சரியாகி வீட்டுக்கு சென்ற பின்பு வர்த்தனை மட்டும் அவள் இல்லாத சமயம் சென்று பார்த்து வருபவன் மறந்தும் கூட அவளின் கண்களில் விழமாட்டான்.

ஆனால் அவனின் கோபத்தையும் சற்றும் குறைக்கவில்லை.. வழக்கம் போல் அடிதடியும் அரக்க குணமும் அவனின் உதிரத்தோடு ஊறிப்போனது.

ஆனால் அவன் அவளுக்காக விட்டு கொடுத்து சென்றவன் அப்படியே சென்றுவிடுவானா என்ன..? பொருத்திருந்து தான் பார்ப்போமே.
 
Top