Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by வித்யா வெங்கடேஷ்

Advertisement

  1. இளமயில் இதயத்திலே 9

    கழுத்தில் தாலி இல்லை, காலில் மெட்டி இல்லை, கண்டதும் நிம்மதி கொண்டவனுக்கு, கட்டியவனின் கடந்தகாலத்தைக் கூறி, கன்னிமகள் தரப்போகிறாள் பேரதிர்ச்சி!!! விறுவிறுவென நகர்கிறது கதை. அருமை ஆத்தரே💕💕
  2. இளமயில் இதயத்திலே 8

    அது என்ன ஆத்தரே! AI pictureல நாலு பேருக்கு காபி கலக்க, அண்டா நிறைய பால் காய்ச்சுறாங்க😀😀😀😀 அதுவும் சென்னையில் பால் விக்குற ரேட்டுல.... what is this கடைக்காரரே🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
  3. இளமயில் இதயத்திலே 8

    ஆருயிர் தோழியே என்றாலும், பெற்றவர்களுடன் வந்த இளா மச்சானின் இங்கிதம் வாரே வாவ்!!! Hats off to your matured writing authorey.💕💕💕
  4. இளமயில் இதயத்திலே 8

    கடவுள் வாழ்த்தும் காதல் கவிதையும், கடந்த கால நினைவுகளும், கடக்க ஏங்கும் எதிர்கால ஏக்கங்களும், கடைக்காரனின் திடீர் விஜயமும், கல்லூரி பேராசிரியரின் தவிப்புகளும், காதலர்கள் காபி கலந்த அழகும், காதால் கேட்ட பெயரில் வெடித்த கோபமும், கதையின் நகர்வும் கொள்ளை அழகு!!!
  5. இளமயில் இதயத்திலே 6 & 7

    இறைவனின் படைப்பில் இதுவும் இயல்பே, இன்முகத்துடன் புரியவைத்த இளங்குமரனின் தந்தை ஒருபுறம்! இன்பமும் துக்கமும் இருபாலருக்கும் ஒன்றே - இதில் இமையோடு கலந்திருக்கும் கண்ணீருக்கு மட்டும் - ஏன் இத்தனை பாரபட்சம் என உடைந்த இளமயிலின் தந்தை மறுபுறம்! இன்றியமையாத தந்தை பாசத்தை உணர்த்திவிட்டனர்! Lovely...
  6. இளமயில் இதயத்திலே 5

    வளர்மதி விவகாரத்தை வினைத்தொகை பாடமாக மாத்தி உங்கள காப்பாற்றிய மயிலு பாப்பாக்கும் ஆத்தருக்கும் ஓ போடுங்க இளா மச்சான்💕💕💕
  7. இளமயில் இதயத்திலே 4

    அட ஆமால்ல... அலைபாயுதே பாட்டோடத்தானே கதையே தொடங்குது😇😇😇
  8. இளமயில் இதயத்திலே 4

    கள்ளம் கபடமில்லா உள்ளங்களின் நட்பு, காதலாக உருமாறிவிடுமோ என அஞ்சி, கலங்கிய தாய்மனம் கணக்கில்லாமல் போதிக்க, கண்டிப்புகளே இன்று ஆசைக்கு வழிவகுத்தது! காரிகையின் மனமும் ஆடவனிடம் விழுந்தது! அழகான எபி ஆத்தரே!🩷🩷 நீங்க எந்த பீரியட் குழந்தைகளை மனசுல வச்சு எழுதறீங்கன்னு தெரியல. ஆனால் ஒரு நடுநிலைப் பள்ளி...
  9. இளமயில் இதயத்திலே 3

    இனம் புரியாத உணர்வுகளைச் சொல்லத் தயங்கும், இளையவர்களின் தடுமாற்றத்தை உணர்ந்து, இலை மறை காயாய் இனப்பெருக்கம் பாடம் எடுத்த, இளமயிலின் கற்பிக்கும் முறை அசத்தல்💕💕 இளாக்களின் இளமைக்கால காட்சிகள்.. innocenceன் உச்சக்கட்டம்...வாரே வாவ் 😍😍
  10. இளமயில் இதயத்திலே 2

    கள்ளம் கபடமில்லாமல் சண்டையிட்டுக் கொண்ட சிறுவர்கள், காலப்போக்கில் காதல் வயப்பட, கல்விச்செல்வமே காரணமாகிப் போன, கடந்த கால நினைவுகள் அருமையோ அருமை! தமிழ்ப் பிரியர் தியாகராஜன், தங்லிஷில் அங்கிகள் என அழைக்கும் சிறுமியிடம், திருத்திச் சொல்லாத காரணமும், தானே உணர்ந்த மயிலின் குணமும் வாரே வாவ்...
  11. இளமயில் இதயத்திலே 1

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! அடிதடியில் அறிமுகமான நட்பையும், அதிரடியாய் கண்முன் நிறுத்தியதே! நீங்க மட்டும்தான் 90s kids பாட்டு பாடுவீங்களா..🤪🤪 இனிக்கும் தேன்மிட்டாயையும், தழும்பான நெற்றிக் காயத்தையும் காலச்சக்கரத்தைச் சுழற்றி இணைத்த ஆரம்பம் அசத்தல் ஆத்தரே🥰🥰🥰 இளமயில்...
  12. திருமதி. பாலா தியாகராஜன் அவர்கள் எழுதிய "பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்"

    ஓம் ஸ்ரீ சாயிராம். இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே. காதலித்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான போதும், அவளை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகன் எனத் தொடங்கும் இக்கதையில் சவால்களுக்குப் பஞ்சமில்லை எனப் புரிந்தது. நீங்கள்...
Top